வருமான வரி உச்சவரம்பு 2023-24 & 2022-23 – புதிய & பழைய வரி விதிப்பு முறைக்கான கட்டணங்கள்

Updated on: Jun 27th, 2023

|

90 min read

social iconssocial iconssocial iconssocial icons

இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி அனைத்து தனிநபர்கள், எச்யுஎஃப், கூட்டுத்தொழில் செய்யும் நிறுவனங்கள், எல்எல்பி-கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் ஆகியவை ஈட்டும் வருமானத்தின் மீது வருமான வரி விதிக்கப்படுகிறது. தனிநபர்களுக்கான வருமான வாரியானது ஒரே மாதிரியாக அல்லாமல், உச்ச வரம்புகளின் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. ஒரு நபரின் வருமானம் குறைந்தபட்ச வரம்புக்கு மேல் இருக்கும் பட்சத்தில் (அடிப்படை தள்ளுபடி வரம்பு என அழைக்கப்படுகிறது), அவர் வருமான வரியை தாக்கல் செய்து, தகுந்த வருமான வரியைச் செலுத்த வேண்டும். தனிநபர்களுக்கான வருமான வரி உச்ச வரம்புகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன - 60 வயதுக்குட்பட்ட நபர்கள், 60 முதல் 80 வயதுடையவர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள். இந்த பிரிவுகள் ஒவ்வொன்றையும் விரிவாக புரிந்து கொள்ளலாம்.

2023 பட்ஜெட் குறித்த அப்டேட்: புதிய வரி விதிப்பு முறைக்கான மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பு

வருமான வரம்பு 

வருமான வரி கட்டணங்கள் 

3,00,000 ரூபாய் வரை 

ஏதுமில்லை 

3.00,000 ரூபாய் முதல் 6,00,000 ரூபாய் வரை 

3,00,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமானத்தில் 5%

6,00,000 ரூபாய் முதல் 900,000 ரூபாய் வரை 

ரூபாய் 15,000 + 6,00,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமானத்தில் 10%

9,00,000 ரூபாய் முதல் 12,00,000 ரூபாய் வரை 

ரூபாய் 45,000 + 9,00,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமானத்தில் 15% 

12,00,000 ரூபாய் முதல் 1500,000 ரூபாய் வரை 

ரூபாய் 90,000 + 12,00,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமானத்தில் 20%

15,00,000 ரூபாய்க்கும் அதிகமாக 

ரூபாய் 150,000 + 15,00,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமானத்தில் 30% 

1. வருமான வரி உச்ச வரம்பு என்றால் என்ன?

வரி செலுத்தும் தனிநபர்கள் மீது இந்திய வருமான வரியானது உச்ச வரம்பு முறைப்படி வரிகளை விதிக்கிறது. உச்ச வரம்பு முறை என்பது வெவ்வேறு வருமான வரம்புகளுக்கு வெவ்வேறான வரிகள் விதிக்கப்படுகிறது. வரி செலுத்தும் தனிநபரின் வருமானம் அதிகமாக அதிகமாக அவர்கள் செலுத்த வேண்டிய வரியும் அதிகரிக்கும் என்பதே இதற்கான அர்த்தம். இதன் காரணமாக இந்த வரி வசூலிப்பு முறை வளர்ச்சியுறும் மற்றும் நியாயமான வரி முறையாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த வருமான வரி உச்ச வரம்பு ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் மாற்றத்திற்கு உட்படுகிறது. இந்த உச்ச வரம்பு கட்டணங்கள் ஒவ்வொரு வரி செலுத்தும் தனிநபர்களுக்கும் மாறுபடும். “வரி செலுத்தும் தனிநபர்களை” வருமான வரி மூன்று வகைகளாக பிரிக்கிறது:

 • குடியுரிமை பெற்ற மற்றும் குடியுரிமை அற்ற நபர்கள் (60 வயதிற்கும் குறைவான) 
 • குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்கள் (60 வயது முதல் 80 வயது வரை)
 • குடியுரிமை பெற்ற மிக மூத்த குடிமக்கள் (80 வயதிற்கு மேற்பட்டோர்)

2. 2022-23 நிதி ஆண்டிற்கான வருமான வரி உச்ச வரம்பு கட்டணங்கள் (வரிவிதிப்பு ஆண்டு 2023-24)

அ. புதிய வரி முறை - 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி அடுக்கு விகிதம்

புதிய வரிவிதிப்பு முறையில், வரி செலுத்தும் நபர்கள் பின்வரும் தேர்வுகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்:

 • புதிய வரி விதிகளின்படி குறைந்த வருமான வரியைச் செலுத்த, வரி செலுத்துவோர் வருமான வரியின் கீழ் கிடைக்கும் சில அனுமதிக்கப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் விலக்குகளை தவிர்க்க வேண்டும், அல்லது
 • ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள வரி கட்டணங்களின் கீழ் தொடர்ந்து வரி செலுத்துதல். பழைய வரி செலுத்தும் முறையைப் பின்பற்றுவதன் மூலமாக, தள்ளுபடிகள் மற்றும் விலக்குகளைப் பெறலாம்

2022-23 நிதி ஆண்டிற்கான வருமான வரி உச்ச வரம்பு கட்டணங்கள் (வரிவிதிப்பு ஆண்டு 2023-24)

உச்ச வரம்பு 

2023 பட்ஜெட்டிற்கு முந்தைய புதிய வரி விதிப்பு முறை    
(31 மார்ச் 2023 வரை)

2023 பட்ஜெட்டிற்குபிறகான புதிய வரி விதிப்பு முறை    
(1 ஏப்ரல் 2023 முதல்)

₹0 - ₹2,50,000

₹2,50,000 - ₹3,00,000

5%

₹3,00,000 - ₹5,00,000

5%

5%

₹5,00,000 - ₹6,00,000

10%

5%

₹6,00,000 - ₹7,50,000

10%

10%

₹7,50,000 - ₹9,00,000

15%

10%

₹9,00,000 - ₹10,00,000

15%

15%

₹10,00,000 - ₹12,00,000

20%

15%

₹12,00,000 - ₹12,50,000

20%

20%

₹12,50,000 - ₹15,00,000

25%

20%

>₹15,00,000

30%

30%

குறிப்பு:

 • புதிய வரி விதிப்பு முறையின்படி, அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நபர்களுக்கும் ஒரே மாதிரியான வரிக் கட்டணங்கள் விதிக்கப்படுகிறது, அதாவது 60 வயது வரையிலான தனிநபர்கள் & எச்யுஎஃப், 60 வயது முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்கள், மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள். எனவே புதிய வரி விதிப்பு முறையில் மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு அதிகரித்த அடிப்படை விலக்கு வரம்பு பலன்கள் எதுவும் கிடைக்காது.
 • 5 லட்சத்திற்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ நிகர வரியிடத்தகு வருமானம் ஈட்டும் தனிநபர்கள் u/s 87A -க்கு கீழ் வரிச் சலுகைக்கு தகுதியுடையவர்கள் ஆவர், அதாவது வரிப் பொறுப்பு புதிய மற்றும் பழைய/தற்போதுள்ள பயன்பாட்டிலுள்ள வரி விதிப்பு முறைகளின்படி அத்தகைய நபர்கள் எந்தவொரு வரியும் செலுத்த தேவையில்லை.     
 • *2023 பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறைகளின்கீழ் விலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் 7லட்சத்திற்கும் உள்ளாக வருமானம் பெறும் நபர்கள் வரி செலுத்த வேண்டாம்.
 • வயதைப் பொருட்படுத்தாமல், என்ஆர்ஐ -களுக்கான தள்ளுபடி வரம்பு ரூபாய் 2.5 லட்சங்கள்.
 • அனைத்து நேர்வுகளிலும், உடல்நலம் மற்றும் கல்விக்கு மேல்வரியாக 4% வருமான வரித் தொகையில் சேர்க்கப்படும். (நிதி ஆண்டு 18-19 -ல் இருந்து 3% அதிகரித்துள்ளது)
 • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகைகளுக்கும் கீழே உள்ள வரி விகிதங்களின்படி மேல்வரி பொருந்தும்:
 • மொத்த வருமானம் >ரூபாய் 50 லட்சம் இருந்தால் 10% வருமான வரி
 • மொத்த வருமானம் >ரூபாய் 1 கோடி இருந்தால் 15% வருமான வரி
 • மொத்த வருமானம் >ரூபாய் 2 கோடி இருந்தால் 25% வருமான வரி
 • மொத்த வருமானம் >ரூபாய் 5 கோடி இருந்தால் 37% வருமான வரி    
 • *2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பின்படி 37% என்ற அதிகபட்ச மேல்வரி 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. (1 ஏப்ரல் 2023 முதல்) 

ஆ. பழைய வரி விதிப்பின்படி வருமான வரி உச்ச வரம்பு கட்டணங்கள் – 2022-23 நிதி ஆண்டு (வரிவிதிப்பு ஆண்டு 2023-24) 

60 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் மற்றும் எச்யுஎஃப்-ற்கான வருமான வரி உச்ச வரம்புகள்                                                                                                                 

வருமான வரி உச்ச வரம்பு

60 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் – வருமான வரி உச்ச வரம்புகள்

2.5 லட்சம் வரை 

ஏதுமில்லை 

ரூபாய். 2.5 லட்சம் - ரூபாய். 5 லட்சம் 

5%

ரூபாய். 5 லட்சம் – ரூபாய்.10 லட்சம் 

20%

> ரூபாய். 10 லட்சம் 

30%

குறிப்பு:

 • 60 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், எச்யுஎஃப் மற்றும் NRIகளுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2,50,000.
 • மேலே கணக்கிடப்பட்ட வரித் தொகைக்கு கூடுதலாக 4% உடல்நலம் மற்றும் கல்வி மேல்வரி விதிக்கப்படும்.
 • மேல்வரி:
  • மொத்த வருமானம் 50 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி வரை இருந்தால், 10% வருமான வரி.
  • மொத்த வருமானம் 1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், 15% வருமான வரி.

இ. 2022-23 நிதி ஆண்டிற்கான வருமான வரி உச்ச வரம்பு கட்டணங்கள் (வரிவிதிப்பு ஆண்டு 2023-24) – புதிய வரிவிதிப்பு முறை & பழைய வரிவிதிப்பு முறை


 

உச்ச வரம்பு 

22-23 நிதி ஆண்டிற்கான பழைய வரிவிதிப்பு முறைப்படி உச்ச வரம்பு கட்டணங்கள் (வரிவிதிப்பு ஆண்டு 23-24)    

குடியுரிமை பெற்ற தனிநபர்கள் & எச்யுஎஃப் 

புதிய வரி முறைப்படி உச்ச வரம்பு கட்டணங்கள்    

அனைத்து வரி செலுத்துவோர்

< 60 வயது  & என்ஆர்ஐ-கள்

> 60 முதல் < 80 வயது வரை 

> 80 வயது 

2023 பட்ஜெட்டிற்கு முன்    

(31 மார்ச் 2023 வரை)

பட்ஜெட் 2023க்குப் பிறகு

 

(ஏப்ரல் 1, 2023 முதல்)

₹0-₹2,50,000

ஏதுமில்லை 

ஏதுமில்லை 

ஏதுமில்லை 

ஏதுமில்லை 

ஏதுமில்லை 

₹2,50,000 -₹3,00,000

5%

ஏதுமில்லை 

ஏதுமில்லை 

5%

ஏதுமில்லை 

₹3,00,000-₹5,00,000

5%

5% (tax rebate u/s 87A is available)

ஏதுமில்லை 

5%

5%

₹5,00,000-₹6,00,000

20%

20%

20%

10%

5%

₹6,00,000-₹7,50,000

20%

20%

20%

10%

10%

₹7,50,000-₹9,00,000

20%

20%

20%

15%

10%

₹9,00,000-₹10,00,000

20%

20%

20%

15%

15%

₹10,00,000-₹12,00,000

30%

30%

30%

20%

15%

₹12,00,000-₹12,50,000

30%

30%

30%

20%

20%

₹12,50,000-₹15,00,000

30%

30%

30%

25%

20%

>₹15,00,000

30%

30%

30%

30%

30%

ஈ. புதிய வரி விதிப்பு முறைக்கான நிபந்தனைகள். 

புதிய வரி விதிப்பு முறையில் சலுகை கட்டணங்களைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோர், தற்போதுள்ள பழைய வரி முறையில் கிடைக்கும் சில தள்ளுபடிகள் மற்றும் விலக்குகளைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் அனுமதிக்கப்படாத 70 விலக்குகள் & தள்ளுபடிகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுவன கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

புதிய வரி விதிப்பு முறையின்படி, “அனுமதிக்கப்படாத” தள்ளுபடிகள் மற்றும் விலக்குகளின் பட்டியல்

 • லீவ் டிராவல் அலவன்ஸ் (எல்டிஏ)
 • ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் (எச்ஆர்ஏ)
 • கன்வேயன்ஸ் அலவன்ஸ் 
 • பணியின்போது ஏற்படும் அன்றாட செலவுகள் 
 • ரீலொகேஷன் அலவன்ஸ் 
 • ஹெல்பர் அலவன்ஸ் 
 • பிள்ளைகள் கல்விக்கான அலவன்ஸ் 
 • பிற ஸ்பெஷல் அலவன்ஸ்கள் [பிரிவு 10(14)]
 • சம்பளத்தில் திட்ட விலக்கு
 • தொழில் வரி 
 • வீட்டு கடன் மீதான வரி (பிரிவு 24)
 • பகுதி VI-A-யின்படி  விலக்கு (80C,80D, 80E and so on) (பிரிவு 80CCD(2) தவிர)

புதிய வரி விதிப்பு முறையின்படி, “அனுமதிக்கப்பட்ட” தள்ளுபடிகள் மற்றும் விலக்குகளின் பட்டியல்

 • மாற்றுத் திறனாளிகளுக்கான டிரான்ஸ்போர்ட் அலவன்ஸ் 
 • பணியின் நிமத்தமாக பயணிக்கும்போது ஏற்படும்  செலவுகளுக்கான படித்தொகை 
 • பிரிவு 80CCD(2) இன் கீழ் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு
 • பிரிவு 80JJAA இன் கீழ் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விலக்கு
 • கூடுதல் மதிப்பிழப்பைத் தவிர்த்து வருமான வரிச் சட்டத்தின் 32-ன்கீழ் மதிப்பிழப்பு.
 • பணிக்காக அல்லது இடமாற்றம் காரணமாக செல்லும் பயணத்திற்காக தரப்படும் படித்தொகை

உ. புதிய வரி விதிப்பு முறையில் என்னென்ன விலக்குகள் மற்றும் தள்ளுபடிகள் அனுமதிக்கப்படுகின்றன? 

புதிய மற்றும் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் கிடைக்கும் விலக்குகள் மற்றும் தள்ளுபடிகள் இடையேயான ஒப்பீடு:

விவரங்கள் 

பழைய வரி விதிப்பு முறை

புதிய வரி விதிப்பு முறை    
( 31 மார்ச் 2023 வரை)

புதிய வரி விதி ப்பு

முறை (ஏப்ரல் 1, 2023 முதல்)

ரிபேட்டிற்கு தகுதி பெறுவதற்கான வருமான அளவு 

₹ 5 லட்சம் 

₹ 5 லட்சம் 

₹ 7 லட்சம் 

திட்ட விலக்கு 

₹ 50,000

₹ 50,000

தொகு வரி-சுயாதீன ஊதிய வருமானம்

₹ 5.5 லட்சம் 

₹ 5 லட்சம் 

₹ 7.5 லட்சம் 

87A-ன் கீழ் ரிபேட் 

12,500

12,500

25,000

எச்ஆர்ஏ தள்ளுபடி 

X

X

லீவ் டிராவல் அலவன்ஸ்  (எல்டிஏ)

X

X

ஒரு நாளைக்கு 2 வேளை உணவுக்கு உட்பட்டு ரூ.50/உணவுக்கான உணவு படித்தொகை உட்பட பிற படித்தொகைகள்

X

X

திட்ட விலக்கு  (ரூபாய் 50,000)

X

பொழுதுபோக்கு படித்தொகை விலக்கு மற்றும் தொழில் வரி 

X

X

அலுவலக தேவைகளுக்கான கூடுதல் தேவைகள்

24b பிரிவின் கீழ் குடியிருக்கும் அல்லது காலியாக உள்ள இடத்தின் மீதான வீட்டுக் கடனுக்கான வட்டி 

X

X

24b பிரிவின் கீழ் பொதுச் சொத்தின் மீதான வீட்டுக் கடனுக்கான வட்டி 

80C பிரிவின் கீழ் விலக்கு  (இபிஎஃப்|எல்ஐசி|இஎல்எஸ்எஸ்|பிபிஎஃப்|எஃப்டி|பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணம் போன்றவை)

X

X

என்பிஎஸ்-க்கான பணியாளரின் (சொந்த) பங்களிப்பு

X

X

என்பிஎஸ்-க்கான பணியாளரின் பங்களிப்பு

மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம் – 80D

X

X

மாற்றுத் திறனாளி  – 80U

X

X

கல்விக் கடன் மீதான வட்டி  – 80E

X

X

எலக்ட்ரிக் வாகன கடன் மீதான வட்டி – 80EEB

X

X

அரசியல் கட்சி/அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை போன்றவை – 80G

X

X

80TTA-ன்கீழ் சேமிப்பு வங்கி வட்டி மற்றும் 80TTB

X

X

பிற பகுதி VI-A விலக்குகள் 

X

X

அக்னிவீர் கார்பஸ் நிதிக்கான அனைத்து பங்களிப்புகளும் – 80CCH

கிடையாது 

குடும்ப ஓய்வூதிய வருமானத்தில் விலக்கு 

ரூபாய் 5,000 வரையிலான பரிசுகள் 

10(10C)தன்விருப்பப் பதவி ஓய்வுக்கான தள்ளுபடி 

10(10)-ன் கீழ் வெகுமதிக்கான தள்ளுபடி 

10(10AA)-ன் கீழ் காசாக்கிக் கொள்வதில் உள்ள தள்ளுபடி 

டெய்லி அலவன்ஸ் 

மாற்றுத் திறனாளிகளுக்கான பயண அலவன்ஸ் 

கன்வேயன்ஸ் அலவன்ஸ் 

ஊ. பழைய வரி விதிப்பு முறை Vs புதிய வரி விதிப்பு முறைக்கான எடுத்துக்காட்டு & எது சிறந்தது?

புதிய வரி விதிப்பு  முறையானது ரூபாய். 15 லட்சம் வரை வருமானம் பெறக்கூடிய நடுத்தர வரி செலுத்தும் நபர்களுக்கு அதிக பலன்களை வழங்குகிறது. அதிக வருமானம் ஈட்டுவோருக்கு பழைய வரி விதிப்பு முறை சிறந்தது.

புதிய வரி விதிப்பு முறையானது குறைந்த முதலீடுகளை செய்யும் நபர்களுக்கு பலன்களை அளிக்க கூடியது. புதிய வரி விதிப்பு முறை ஏழு குறைவான வருமான வரி உச்ச வரம்புகளை வழங்குவதால் வரி விலக்குகள் இல்லாமல் வரி செலுத்த விரும்பும் எவருக்கும் இந்த புதிய வரி விதிப்பு முறை பயனுள்ளதாக அமையும். உதாரணமாக, ஒரு நபர் விலக்குகளுக்கு முன்பு 12 லட்சம் வரையிலான மொத்த வருமானத்தை பெற்று இருப்பதாக கருதுவோம். பழைய முறையின்படி, இவர் ₹ 1.91 லட்சத்திற்கும் குறைவான முதலீடுகளை செய்திருந்தால், அதிக வரிகளை செலுத்த வேண்டி இருக்கும். ஆகவே நீங்கள் வரி சேமிப்பு திட்டங்களில் குறைவாக முதலீடு செய்துள்ளீர்கள் என்றால், புதிய வரிகள் விதிப்பு முறையை தேர்வு செய்வது நல்லது.

நீங்கள் ஏற்கனவே மெடிகிளைம், லைஃப் இன்சூரன்ஸ் போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து இருந்தீர்கள் என்றால், பிள்ளைகளின் கல்வி கட்டணம், கல்வி கடனுக்கான இஎம்ஐ-கள், ஹோம் லோன் மூலமாக வீடு வாங்குதல் மற்றும் பலவற்றை செய்வதன் மூலமாக நீங்கள் பழைய வரி விதிப்பு முறையில் அதிக விலக்குகளை பெற்று குறைந்த வரியைக் கட்டலாம்.

மேலே கூறியவை மற்றும்  புதிய வருமான வரி விதிப்பு முறையை கருத்தில் கொண்டு பேசும் பொழுது, சலுகைக்கு உட்பட்ட வருமான வரிகளை செலுத்த விரும்பும் நபர்கள் இரண்டு வரி விதிப்பு முறைகளையும் ஒப்பிட்டு பார்த்து அவர்களுக்கு தகுந்த ஒன்றை தேர்வு செய்வது சிறந்த யோசனையாக இருக்கும். ஏனெனில் நபருக்கு நபர் தேவைகளும் பலன்களும் மாறுபடும் என்பதால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்வது நல்லது.

இப்பொழுது ரூபாய். 10  லட்சம் வருமானம் பெறக்கூடிய ஒரு நபரை உதாரணமாக எடுத்துக்கொண்டு, பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறையை ஒப்பிட்டு பார்க்கலாம்.

ராகுல் என்பவர் ஊதியம் வாயிலாக ரூபாய் 10 லட்சத்தை வருமானமாக பெறுகிறார். இவர் 80 சி பிரிவின் கீழ் இஎல்எஸ்எஸ், பிஎஃப், எல்ஐசி பிரிமியம் மற்றும் வீட்டுக் கடனுக்கான முதன்மை  இன்ஸ்டால்மெண்ட் போன்றவைகளுக்கு செய்த மொத்த முதலீடு ரூபாய் 1.7 லட்சம். இதுபோக இவர் இவருக்கும் இவர் மனைவிக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸாக ₹28,000 செலுத்தி வருகிறார். இவர் பழைய வரி விதிப்பு முறையை தேர்வு செய்தால், மேலே கூறப்பட்டுள்ள விலக்குகளை இவர் கிளைம் செய்து கொள்ளலாம். எனினும் இவர் புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்ய விரும்பினால், இந்த விலக்குகள் இவருக்கு கிடைக்காது. இவர் 2020-21 நிதியாண்டில் ரூபாய் 75,000 வீட்டுக் கடனுக்கான வட்டியாக செலுத்தியுள்ளார். இப்பொழுது இரண்டு வரி விதிப்பு முறைகளிலும் இவர் செலுத்த வேண்டிய மொத்த வரியை பார்க்கலாம்.

விவரங்கள் 

பழைய வரி விதிப்பு முறை (ரூபாய்)

புதிய வரி விதிப்பு  முறை (ரூ.)

நிகர வருமானம் 

1,000,000

1,000,000

விலக்குகள்:

 

 

80C பிரிவின் கீழ் 

150,000

80D பிரிவின் கீழ்

25,000

24(b) பிரிவின் கீழ்

75,000

வரிவிதிப்பிற்குரிய வருமானம் 

750,000

1,000,000

வரி உச்ச வரம்பு  (பழைய)

 

 

0 முதல் 2.5 லட்சம் வரை 

2.5 முதல் 5 லட்சம் வரை @ 5%

12,500

5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை @ 20%

50,000

> 10 லட்சம் @ 30%

வரி உச்ச வரம்பு (புதிய)

 

 

0 முதல் 5 லட்சம் வரை

2.5 முதல் 5 லட்சம் வரை @ 5%

12,500

5 முதல் 7.5 லட்சம் வரை @ 10%

25,000

7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை @ 15%

37,500

10 லட்சம் முதல் 12.5 Lakh @ 20%

12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை @ 25%

> 15 லட்சம் @ 30%

வருமான வரி

62,500

75,000

மேல்வரி @ 4%

2,500

3,000

செலுத்த வேண்டிய மொத்த வரி

65,000

78,000

மேலே உள்ள விளக்கத்தின்படி, மொத்த வருமானம் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் அல்லது வருமான வரிச் சட்டத்தின் 80C, 80D மற்றும் 24(b) ஆகிய பிரிவுகளின் கீழ் விலக்குகளைப் பெற்றிருந்தால், பழைய வரி விதிப்பு முறையானது பயனுள்ளதாக இருக்கும். நடுத்தர அளவிலான வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு, அதாவது மொத்த வருமானம் ரூ. 5 லட்சம் என்று கருதினால்; புதிய வரி விதிப்பு முறை அதிக லாபத்தை அளிக்கும்.

எ. பழைய vs புதிய வரி விதிப்பு முறையையே தேர்வு செய்வதற்கான நேரம்?

வருமானத்தின் தன்மை

பழைய vs புதிய வரி விதிப்பு முறையையே தேர்வு செய்வதற்கான நேரம்

ஊதியம் மூலமாக வருமானம் அல்லது TDS பிடித்தம் செய்யக்கூடிய வருமானம் 

ஒரு ஊழியர் புதிய வரி விதிப்பு முறையைத் தேர்வு செய்து, நிதியாண்டின் தொடக்கத்திலேயே தாங்கள் பணிபுரியும் முதலாளியிடம் தெரிவிக்கலாம். ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டுமே தங்கள் விருப்பம் போல வரி முறையைத் தேர்ந்தெடுத்து மாற்றலாம் 

எனினும், புதிய வரி விதிப்பு முறையை ஆண்டின் ஆரம்பத்தில் தேர்வு செய்து விட்டால், TDS காரணத்திற்காக அதனை மீண்டும் மாற்ற முடியாது. எனினும், வருமான வரி தாக்கல் செய்யும்போது ஒருவர் தங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்ளலாம்.

தொழில் & வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானம்

வியாபாரம் அல்லது தொழில் வருமானம் எனில், ஒரு குறிப்பிட்ட வியாபாரத்திற்கு வரி விதிப்பு முறைகளை தேர்வு செய்வதற்கான விருப்பம் ஒருமுறை மட்டுமே கிடைக்கும்.

ஏ. உள்ளூர் நிறுவனங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைக்கான உச்ச வரம்பு கட்டணங்கள் – நிதி ஆண்டு 2022-23

விவரங்கள் 

பயன்பாட்டில் உள்ள/ பழைய வரி விதிப்பு முறைக்கான உச்ச வரம்பு கட்டணங்கள்

புதிய வரி விதிப்பு முறைates

நிறுவனம் அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்டது மற்றும் 31 மார்ச், 2023 அன்று அல்லது அதற்கு முன் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக இருந்தால், நிறுவனம் பிரிவு 115BAB (பிரிவு 115BA மற்றும் 115BAA இல் உள்ளடக்கப்படவில்லை) -ஐத் தேர்வு செய்கிறது.

15%

ஒரு நிறுவனத்தின் மொத்த வருமானம் குறிப்பிட்ட விலக்குகள், ஊக்கத்தொகைகள், தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் தேய்மானம் ஆகியவற்றைக் கோராமல்  கணக்கிடப்படும் போது, நிறுவனம் பிரிவு 115BAA ஐத் தேர்வுசெய்கிறது.

22%

நிறுவனம் மார்ச் 1, 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மற்றும் ஏதேனும் பொருளின் உற்பத்தியில் ஈடுபட்டு, பிரிவின் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி விலக்கு கோரவில்லை.

25%

2018-19 முந்தைய 2018-19 ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் அல்லது மொத்த வரவு ரூ. 400 கோடிக்கும் குறைவாக உள்ளது 

25%

25%

பிற உள்ளூர் நிறுவனங்கள் 

30%

30%

*மேலே உள்ள சலுகை வருமான வரி கட்டணங்களுக்கான பொருந்துதலை சரிபார்க்க புதிய பிரிவுகளைப் பார்க்கவும்.

அனைத்து நேர்வுகளிலும் கூடுதல் சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி 4% விகிதத்தில் வருமான வரிக் கடனுடன் சேர்க்கப்படும்.

 • நிறுவனங்களுக்கான மேல்வரி பின்வருமாறு::
 • மொத்த வருமானம் > ரூபாய் 1 கோடி என்றால் வருமான வரியில் 7%
 • மொத்த வருமானம் > ரூபாய் 10 கோடி என்றால் வருமான வரியில் 12% 
 • உள்ளூர் நிறுவனம் 115BAA மற்றும் 115BAB பிரிவைத் தேர்ந்தெடுத்து இருந்தால், வருமான வரியில் 10%

i. பழைய/புதிய வரி விதிப்பு முறையின்படி கூட்டாண்மை நிறுவனம் அல்லது எல்எல்பி-க்கான வருமான வரி கட்டணங்கள்.

ஒரு கூட்டாண்மை நிறுவனம் அல்லது எல்எல்பி 30% வரிக்கு உட்பட்டது.     

* ரூபாய். 1 கோடிக்கும் அதிகமான வருமானத்திற்கு 12% மேல்வரி விதிக்கப்படுகிறது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி கட்டணம் 4 % குறிப்பு- புதிய வரி விதிப்பு முறையில், நிறுவனங்கள்/ எல்எல்பி -களுக்கு எந்த ஒரு சலுகை கட்டணங்களும் கிடையாது.

3. 2022-23 நிதி ஆண்டிற்கான வருமான வரி உச்ச வரம்பு கட்டணங்கள்

அ. புதிய வரி விதிப்பு முறைப்படி, வருமான வரி உச்ச வரம்பு கட்டணங்கள்

வருமான வரி உச்ச வரம்பு

புதிய வரி விதிப்பு முறைப்படி, வருமான வரி உச்ச வரம்பு கட்டணங்கள்    
(அனைத்து தனிநபர்கள் & எச்யுஎஃப் -க்கு பொருந்தும்)

ரூபாய் 0.0 – ரூபாய் 2.5 lakh

ஏதுமில்லை 

ரூபாய் 2.5 lakh – ரூபாய் 3.00 lakh

5% (87a -இன் கீழ் வரி தள்ளுபடி கிடைக்கிறது)

ரூபாய் 3.00 லட்சம் – ரூபாய் 5.00 லட்சம் 

ரூபாய் 5.00 லட்சம் - ரூபாய் 7.5 லட்சம் 

10%

ரூபாய் 7.5 லட்சம் – ரூபாய் 10.00 லட்சம் 

15%

ரூபாய் 10.00 லட்சம் – ரூபாய் 12.50 லட்சம் 

20%

ரூபாய் 12.5 lakhs – ரூபாய் 15.00 லட்சம் 

25%

> ரூபாய் 15 லட்சம் 

30%

குறிப்பு:

 • புதிய வரி விதிப்பு முறைப்படி, அனைத்து வகை தனிநபர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணங்கள் விதிக்கப்படுகிறது, அதாவது 60 வயது வரை உள்ள தனிநபர்கள் & எச்யுஎஃப், 60 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக வரி வசூலிக்கப்படுகிறது. எனவே புதிய வரி விதிப்பு முறையில் மூத்த மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு அதிகரிக்கப்பட்ட அடிப்படை விலக்கு வரம்புக்கான பலன்கள் எதுவும் கிடைக்காது.
 • 5 லட்சத்திற்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ நிகர வரி விதிக்கக்கூடிய வருமானம் ஈட்டும் தனிநபர்கள் 87A பிரிவின் கீழ் வரிச் சலுகைக்கு தகுதி பெறுவார்கள், அதாவது புதிய மற்றும் பழைய/பயன்பாட்டில் உள்ள வரி விதி விதிப்பு முறைகளின் கீழ் ஒரு நபரின் வரிக் கடன் பூஜ்யமாக இருக்கும்.
 • வயதைப் பொருட்படுத்தாமல் என்ஆர்ஐ-களுக்கான அடிப்படை விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சம்.
 • அனைத்து நேர்வுகளிலும் கூடுதல் சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி 4% விகிதத்தில் வருமான வரிக் கடனுடன் சேர்க்கப்படும்.
 • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகைகளிலும் கீழே உள்ள வரி கட்டணங்களின்படி மேல்வரி பொருந்தும்:
  • மொத்த வருமானம் > ரூபாய்.50 லட்சம் என்றால் வருமான வரியில் 10% 
  • மொத்த வருமானம் > ரூபாய்.1 கோடி என்றால் வருமான வரியில் 15% 
  • மொத்த வருமானம் > ரூபாய்.2 கோடி என்றால் வருமான வரியில் 25% 
  • மொத்த வருமானம் > ரூபாய்.5 கோடி என்றால் வருமான வரியில் 37% 

ஆ. பழைய வரி விதிப்பு முறைப்படி வருமான வரி உச்ச வரம்பு கட்டணங்கள்

60 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் & எச்யுஎஃப்-களுக்கான வருமான வரி உச்ச வரம்புகள்

வருமான வரி உச்ச வரம்பு

60 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் – வருமான வரி உச்ச வரம்புகள்

ரூபாய் 2.5 லட்சம் வரை

ஏதுமில்லை 

ரூபாய். 2.5 லட்சம் -ரூபாய். 5 லட்சம் 

5%

ரூபாய் 5.00 லட்சம் – ரூபாய் 10 லட்சம் 

20%

> ரூபாய் 10.00 லட்சம் 

30%

குறிப்பு:

 • 60 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், எச்யுஎஃப் மற்றும் NRIகளுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2,50,000.
 • மேலே கணக்கிடப்பட்ட வரித் தொகைக்கு கூடுதலாக 4% உடல்நலம் மற்றும் கல்வி மேல்வரி விதிக்கப்படும்.
 • மேல்வரி:
  • மொத்த வருமானம் 50 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி வரை இருந்தால், 10% வருமான வரி.
  • மொத்த வருமானம் 1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், 15% வருமான வரி.

இ. 2022-23 நிதி ஆண்டிற்கு (வரிவிதிப்பு ஆண்டு 2023-24) உள்ளூர் நிறுவனங்களுக்கான பழைய/புதிய வருமான கட்டணங்கள் 

Particulars

Existing / Old regime Tax rates

New Regime Tax rates

நிறுவனம் அக்டோபர் 1, 2019 அன்று அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்டது மற்றும் 31 மார்ச், 2023 அன்று அல்லது அதற்கு முன் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக இருந்தால், நிறுவனம் பிரிவு 115BAB (பிரிவு 115BA மற்றும் 115BAA இல் உள்ளடக்கப்படவில்லை) -ஐத் தேர்வு செய்கிறது.

15%

ஒரு நிறுவனத்தின் மொத்த வருமானம் குறிப்பிட்ட விலக்குகள், ஊக்கத்தொகைகள், தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் தேய்மானம் ஆகியவற்றைக் கோராமல்  கணக்கிடப்படும் போது, நிறுவனம் பிரிவு 115BAA ஐத் தேர்வுசெய்கிறது.

22%

நிறுவனம் மார்ச் 1, 2016 அன்று அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட மற்றும் ஏதேனும் பொருளின் உற்பத்தியில் ஈடுபட்டு, பிரிவின் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி விலக்கு கோரவில்லை.

25%

முந்தைய 2018-19 ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் அல்லது மொத்த வரவு ரூ. 400 கோடிக்கும் குறைவாக உள்ளது 

25%

25%

பிற உள்ளூர் நிறுவனங்கள் 

30%

30%

*மேலே உள்ள சலுகை வருமான வரி கட்டணங்களுக்கான பொருந்துதலை சரிபார்க்க புதிய பிரிவுகளைப் பார்க்கவும்.

அனைத்து நேர்வுகளிலும் கூடுதல் சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி 4% விகிதத்தில் வருமான வரிக் கடனுடன் சேர்க்கப்படும்.

 • நிறுவனங்களுக்கான மேல்வரி பின்வருமாறு:
 • மொத்த வருமானம் > ரூபாய் 1 கோடி என்றால் வருமான வரியில் 7%
 • மொத்த வருமானம் > ரூபாய் 10 கோடி என்றால் வருமான வரியில் 12% 
 • உள்ளூர் நிறுவனம் 115BAA மற்றும் 115BAB பிரிவைத் தேர்ந்தெடுத்து இருந்தால், வருமான வரியில் 10%

h. பழைய/புதிய வரி விதிப்பு முறையின்படி கூட்டாண்மை நிறுவனம் அல்லது எல்எல்பி-க்கான வருமான வரி கட்டணங்கள்.

ஒரு கூட்டாண்மை நிறுவனம் அல்லது எல்எல்பி 30% வரிக்கு உட்பட்டது.     
* ரூபாய். 1 கோடிக்கும் அதிகமான வருமானத்திற்கு 12% மேல்வரி விதிக்கப்படுகிறது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி கட்டணம் 4 % குறிப்பு- புதிய வரி விதிப்பு முறையில், நிறுவனங்கள்/ எல்எல்பி -களுக்கு எந்த ஒரு சலுகை கட்டணங்களும் கிடையாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ’கள்)

2022–23 நிதி ஆண்டிற்கு வருமான வரி தாக்கல் செய்யும்போது நான் கட்டாயமாக புதிய வரி விதிப்பு முறையைத் தேர்வு செய்ய வேண்டுமா?

இல்லை, புதிய வருமான வரி விதிப்பு முறை என்பது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஒன்றுதான். மேலும் இது வருமான வரி தாக்கல் செய்வதை எளிமையாக்குவதன் பொருட்டு நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரி செலுத்தும் நபர் புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்யலாம் அல்லது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய வரி விதிப்பு முறையை பின்பற்றலாம். நீங்கள் ஊதியம் பெறும் ஊழியராக இருந்தால் நீங்கள் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அடுத்த வருடத்தில் அதனை மாற்றியும் கொள்ளலாம். எனினும் நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் நபராக இருந்தால் புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும். ஆகவே இரண்டு வரி விதிப்பு முறையையும் ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கு எது பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பின்பு அதனை தேர்வு செய்யுமாறு நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

நான் 80சி விலக்குகளை கிளைம் செய்து, புதிய வருமான வரி உச்ச வரம்பு முறையை தேர்வு செய்து கொள்ளலாமா?

இல்லை, பழைய அல்லது பயன்பாட்டில் உள்ள வரி விதிப்பு முறையில் கிடைக்கக்கூடிய விலக்குகள் மற்றும் தள்ளுபடிகள் புதிய வரி விதிப்பு முறையில் கிடைக்காது. வரி செலுத்தும் நபர் புதிய வரி விதிப்பு முறையின்படி சலுகை வரி உச்சவரம்பு கட்டணங்களை தேர்வு செய்தால், 80 சி பிரிவின் கீழ் வரும் விலக்குகளை அவர் கிளைம் செய்து கொள்ள இயலாது.

2021-22 நிதி ஆண்டிற்கான வருமான வரியை நான் எவ்வாறு கணக்கிட வேண்டும்?

வரி செலுத்தும் நபர் கிடைக்கக்கூடிய இரண்டு வரி விதிப்பு முறைகளில் ஒன்றை தேர்வு செய்வதன் மூலமாக வரிகளை செலுத்த அரசாங்கம் அனுமதிக்கிறது .அதாவது பழைய வரி விதிப்பு முறை அல்லது புதிய வரி விதிப்பு முறை. ஒரு நபர் பழைய வரி விதிப்பு முறையை பின்பற்ற விரும்பினால், அதனை செய்வதற்கு புதிய வரி விதிப்புமுறை அனுமதிக்கிறது. ஒரு நபர் புதிய வரி செலுத்தும் முறையை தேர்வு செய்தால், பழைய வரி விதிப்பு முறையில் கிடைக்கக்கூடிய விலக்குகள் மற்றும் தள்ளுபடிகளை வரி செலுத்தும் நபர் தவிர்க்க வேண்டி இருக்கும். அதுவே அவர் பழைய வரி விதிப்பு முறையை பின்பற்றினால் ஏற்கனவே கிடைத்த  விலக்குகள் மற்றும் தள்ளுபடிகளை அவர் பெறுவார். புதிய வரி விதிப்பு முறையில், 80 CCD(2) பிரிவின் கீழ், ஒரே ஒரு விலக்கு மட்டுமே கிடைக்கிறது. அதாவது ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு (என்பிஎஸ்) ஒரு நபரின் பங்களிப்பு, அவரின் ஆண்டு வருமானத்தில் இருந்து குறைக்கப்படுகிறது.  பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளின் கீழ், அடிப்படை தள்ளுபடி வரி ஆனது ரூபாய் 2.5 ஐந்து லட்சம் ஆகும். இது இரண்டு முறைகளுக்கும் பொருந்தும்.

அரசாங்கம் வரிகளை எவ்வாறு வசூல் செய்கிறது?

அரசாங்கம் மூன்று வழிகளில் வரிகளை வசூலிக்கிறது: அ) பல்வேறு நியமிக்கப்பட்ட வங்கிகள் மூலமாக வரி செலுத்தும் நபர்கள் தாமாக முன்வந்து வரிகளை செலுத்துதல். உதாரணமாக அட்வான்ஸ் டாக்ஸ் மற்றும் செல்ஃப்  அசஸ்மென்ட் டேக்ஸ் பேமென்ட்கள். ஆ) ஒரு நபர் பெறும் வருமானத்திலிருந்து நேரடியாக வசூலிக்கப்படும் வரிகள் (டிடிஎஸ்). இ) மூலத்திலிருந்து வசூலிக்கப்படும் வரிகள் (டிசிஎஸ்).

வருமான வரி செலுத்த வேண்டிய கால அளவு என்ன?

வருமான வரிச் சட்டம் வருடத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறது (i) முந்தைய ஆண்டு, மற்றும் (ii) வரி விதிப்பு ஆண்டு. வருமான வரியானது ஒரு நபரின் ஆண்டு வருமானத்தில் வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் அடுத்த காலண்டர் வருடத்தின் 31 மார்ச் வரையிலான காலத்தில் ஈட்டப்பட்ட வருமானம் என்பது 'முந்தைய ஆண்டு' என வகைப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், முந்தைய ஆண்டை பின் தொடரும் காலம் 'வரிவிதிப்பு ஆண்டு' (ஏப்ரல் 1 முதல் 31 மார்ச் வரை) ஆக கருதப்படுகிறது.
உதாரணமாக, தற்போதைய முந்தைய ஆண்டு என்பது 1 ஏப்ரல் 2021 முதல் 31 மார்ச் 2022 , i.e. 2021-22 நிதி ஆண்டு. இதற்கு ஒத்த வரிவிதிப்பு ஆண்டு என்பது 1 ஏப்ரல் 2022 முதல் 31 மார்ச் 2023 வரை, i.e. AY 2022-23 வரிவிதிப்பு ஆண்டு.

சலானில் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மீதான வருமான வரி மற்றும் நிறுவனங்கள் அல்லாதவை மீதான வருமான வரி என்பது என்ன?

நிறுவனங்கள் ஈட்டும் வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வரி நிறுவன வரி என்றும் இந்த வரியானது சலானில் நிறுவனங்கள் மீதான வருமான வரி (நிறுவனங்கள் வரி)-0020 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே கார்ப்பரேட் அல்லாதவைகளுக்கு (நிறுவனங்கள் அல்லாத)-0021 வருமான வரி என்று சலானில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வரி செலுத்தும் அனைத்து நபர்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி ஒரே மாதிரியாக இருக்குமா?

இல்லை, அனைத்து வரி செலுத்தும் நபர்களுக்கும் ஒரே மாதிரியான வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி இருக்காது. வரி சொலுத்தும் தனிநபர்களுக்கு வரி விதிப்பு ஆண்டின் 31 ஜூலை கடைசி தேதி ஆகும்.

ஐடி விதியின்படி பிரிவு 87 A -ன் கீழ் வரும் ரிபேட் என்பதற்கான அர்த்தம் என்ன?

பிரிவு 87A என்பது 1961 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்க அனுமதிக்கும் சட்டப்பூர்வ உரிமையாகும். 2013 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட இந்த பிரிவு, குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வரிச் சலுகை அளிக்கிறது. இந்தியாவில் வசிக்கும் மற்றும் ரூ. 5,00,000க்கு மிகாமல் வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரும் தள்ளுபடியைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று பிரிவு 87 A கூறுகிறது. மொத்த வரிவிதிப்பு வருமானத்தில் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறும் தனிநபர்கள் முழு வருமான வரி தள்ளுபடியைப் பெறுவார்கள். இந்த தள்ளுபடி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு பொருந்தாது. மேலும் இது 4% சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி சேர்ப்பதற்கு முன் கணக்கிடப்படுகிறது.

வருமான வரி உச்சவரம்பு கட்டணங்களை முடிவு செய்வது யார் மற்றும் அதனை மாற்ற இயலுமா? 

ஆம், வருமான வரி உச்சவரம்பு கட்டணங்களை அரசாங்கத்தால் மாற்ற இயலும். அந்த நிதியாண்டில், வருமான வரி உச்சவரம்பு கட்டணங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமாயின், அந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் அது அறிமுகப்படுத்தப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

வெவ்வோறு பிரிவுகளுக்கு தனித்தனி உச்சவரம்பு கட்டணங்கள் உள்ளனவா? 

ஆம், 60 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள், 60 வயது முதல் 80 வயது வரையிலான நபர்கள் (மூத்த குடிமக்கள்) மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் (மிக மூத்த குடிமக்கள்) போன்ற வரி செலுத்தும் தனி நபர்களுக்கு தனித் தனி உச்சவரம்பு கட்டணங்கள் உள்ளன. மேலும் கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் எல்எல்பிகள், நிறுவனங்கள், உள்ளூர் ஆணையங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள்  போன்ற அனைவருக்கும் வெவ்வேறான வரிக்  கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

என்னுடைய ஆண்டு வருமானம் அடிப்படை தள்ளுபடி வரம்பில் ரூபாய் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் நான் வருமான வரி அறிக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்ய வேண்டுமா?

வரிவிதிப்பு செயல்முறையானது பல்வேறு காரணிகளை பொருத்து அமையும். ஆகவே நீங்கள் தனிப்பட்ட வரி ஆலோசகரை அணுகி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

ஆன்லைனில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வது எப்படி? 

ஆன்லைனில் உங்கள் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க, வருமான வரி e-தாக்கல் போர்ட்டலுக்குள் நீங்கள் லாகின் செய்ய வேண்டும் அல்லது கிளியர் டேக்ஸ் மூலமாகவும் நீங்கள் இணைய வழி தாக்கல் செய்யலாம். வருமான வரி போர்ட்டல் மூலமாக தாக்கல் செய்ய என்ற இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். ஜேஎஸ்ஓஎன் யுட்டிலிட்டி என்பதை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்தும் நீங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம். ஆனால் சமர்ப்பிக்கும் முன் அல்லது ஐடிஆர் தாக்கல் செய்த 120 க்கு முன் உங்கள் அறிக்கையை சரிபார்க்க மறந்து விடாதீர்கள். சரிப்பார்ப்பு செயல்முறையை செய்யாவிடில், நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கை நிறைவு பெறாத ஒன்றாக கருதப்படும். வருமான வரி அறிக்கையை இன்கம் டேக்ஸ் இ-ஃபைலிங் போர்ட்டலில் எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கான படிப்படியான செயல்முறையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் எவ்வளவு வருமான வரிவிலக்கு வழங்கப்படுகிறது?

வருமான வரி செலுத்துபவர்கள் எந்த வரம்பு வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்து வருமான வரிச் சட்டம் அடிப்படை வரம்பை அமைத்துள்ளது. வரி செலுத்துவோரின் வகையைப் பொறுத்து இந்த வரம்பானது மாறுபடும். 60 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருந்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆனால் 80 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வருமானம் 3 லட்சத்திற்குள் இருந்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. 80 வயதுக்கு மேல் உள்ளவர்களின் வருமானம் 5 லட்சலட்சத்திற்குள் இருந்தால், அவர்கள்  வருமான வரி செலுத்தத் தேவையில்லை. நம் புதிய வரி விதிப்பின் கீழ், அனைத்து தனிநபர்களுக்கும் வயது வித்தியாசம் இல்லாமல், இந்த வரம்பு ரூ.2.5 லட்சம் ஆக உள்ளது.

வருமான வரி மீதான கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சர்சார்ஜ் என்பது வரி மீதான வரி விதிப்பாகும். இது நீங்கள் செலுத்த வேண்டிய வரியைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது. நீங்கள் ஈட்டும் வருமானத்தின் அடைப்படையில் கணக்கிடப்படுவதில்லை. உங்கள் வருமானம் ரூ. 1000 ஆக இருந்தால், உங்களுக்கு 30% வரி, அதாவது ரூ. 300 வரி செலுத்த வேண்டும். உங்களுக்கு சர்சார்ஜ் இருந்தால், நீங்கள் அந்த ரூ. 300 இல் 10%, அதாவது ரூ. 30 செலுத்த வேண்டும். சர்சார்ஜ் சதவீதம் வருமான வரம்பைப் பொறுத்து மாறுபடும். உங்கள் மொத்த வருமானம் 50 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், 10% சர்சார்ஜும், 1 கோடிக்கு மேல் இருந்தால் 15%, 2 கோடிக்குள் இருந்தால் 25% மற்றும் 5 கோடிக்கு மேல் இருந்தால் 37% என்ற அடைப்படையில் சர்சார்ஜ் கணக்கிடப்படும்.

வருமான வரி செலுத்த நாம் மூத்த குடிமக்களின் வயதைக் எவ்வாறு கணக்கிட வேண்டும்?

பொதுவாக 60 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் மூத்த குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். அதே சமயம், வருமான வரியின் நோக்கத்திற்காக, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், சூப்பர் மூத்த குடிமக்களாகக் கருதப்படுகின்றனர். நிவாரணங்கள் வழங்கும் பொருட்டு, மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் அதிக வரி விலக்கு வரம்புகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வருமான வரியை ஆன்லைன் மூலமாக எப்படி செலுத்தலாம்?

நீங்கள் ஆன்லைன் மூலமாக வருமான வரி செலுத்த விரும்பினால், nsdl.com என்ற முகவரிக்கு செல்லவும். சரியான சலானை எடுத்துக்காட்டாக, சுய மதிப்பீட்டு வரி செலுத்துவதற்கு, ‘சலான் எண் / ஐடிஎன்எஸ் 280’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் தொடரவும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து, "வருமான வரி (நிறுவனங்கள் தவிர)" என வரி செலுத்தலைத் தேர்வு செய்யவும். பின்னர், கட்டணம் செலுத்தும் வகை மற்றும் பணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்து, பான் கார்டு எண், வரிவிதிப்பு ஆண்டு, முகவரி போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். அடுத்து வேறொரு விண்டோ திறக்கும். அதில் நீங்கள் நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். நீங்கள் வரிப் பணம் செலுத்திய பின்னர் பணம் செலுத்தியதற்கான சான்றாக ஒரு கவுண்டர் ஃபாயில் வழங்கப்படும். நீங்கள் இந்த கவுண்டர் ஃபாயிலை உங்கள் எதிர்கால தேவைக்காக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பொருளடக்கம்

Clear offers taxation & financial solutions to individuals, businesses, organizations & chartered accountants in India. Clear serves 1.5+ Million happy customers, 20000+ CAs & tax experts & 10000+ businesses across India.

Efiling Income Tax Returns(ITR) is made easy with Clear platform. Just upload your form 16, claim your deductions and get your acknowledgment number online. You can efile income tax return on your income from salary, house property, capital gains, business & profession and income from other sources. Further you can also file TDS returns, generate Form-16, use our Tax Calculator software, claim HRA, check refund status and generate rent receipts for Income Tax Filing.

CAs, experts and businesses can get GST ready with Clear GST software & certification course. Our GST Software helps CAs, tax experts & business to manage returns & invoices in an easy manner. Our Goods & Services Tax course includes tutorial videos, guides and expert assistance to help you in mastering Goods and Services Tax. Clear can also help you in getting your business registered for Goods & Services Tax Law.

Save taxes with Clear by investing in tax saving mutual funds (ELSS) online. Our experts suggest the best funds and you can get high returns by investing directly or through SIP. Download Black by ClearTax App to file returns from your mobile phone.

Cleartax is a product by Defmacro Software Pvt. Ltd.

Company PolicyTerms of use

ISO

ISO 27001

Data Center

SSL

SSL Certified Site

128-bit encryption