வருமான வரி அறிக்கை என்பது வரி செலுத்துபவர் தனது வருமானம், செலவுகள், வரி விலக்குகள், முதலீடுகள், வரிகள் போன்றவற்றைத் தெரிவிக்க அனுமதிக்கும் படிவமாகும். வரி செலுத்துபவர் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதை, வருமான வரிச் சட்டம், 1961 என்பது பல்வேறு சூழ்நிலைகளின் கீழ் கட்டாயமாக்குகிறது.
வருமான வரி அறிக்கை என்பது வரி செலுத்துபவரின் வருட வருமானத்தை அறிக்கையாக வெளியிடுவதற்கான ஒரு படிவமாகும். இருப்பினும், வருமானமற்ற நிலையிலும் கூட, இழப்பை முன் வைத்தல், செலுத்திய வருமான வரியைத் திரும்பப் பெறுதல், வரி விலக்கு கோருதல் என வருமான வரியைத் தாக்கல் செய்ய பல காரணங்கள் இருக்கலாம்.
வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான மின்னணு தாக்கல் (இ-பைலிங்க்) வசதியை வருமான வரித் துறை வழங்குகிறது. வருமான வரி தாக்கல் செய்வதில் உள்ள படிநிலைகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னர், வரிசெலுத்துபவர் ITR-ரில் கணக்கெடுப்பு மற்றும் தரவை அறிக்கையிடுவது சம்பந்தமான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது அவசியம்.
வரி செலுத்துபவர், வருமான வரி விதிமுறைகளுக்கு ஏற்ப தமது வருமானத்தை கணக்கிட வேண்டும்.
சம்பளம், சுயாதீன வருமானம் (ஃப்ரீலான்சிங்), வருமானத்திலிருந்து கிடைக்கப் பெற்ற வட்டி போன்ற அனைத்து மூலாதாரங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வரி சேமிப்பு முதலீடுகள் போன்ற தள்ளுபடிகளை, பிரிவு 80C போன்றவற்றின் கீழ் வரி செலுத்துபவர் கோரலாம்.
TDS, TCS அல்லது முன்கூட்டியே அவர்கள் செலுத்திய வரியையும், வரி செலுத்துபவர் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிதி ஆண்டின் நான்கு காலாண்டுகளுக்கும், வரி செலுத்துபவர் தனது TDS தொகையை TDS சான்றிதழ்களிலிருந்து சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும். படிவம் 26AS-யானது, குறிப்பிட்ட நிதி ஆண்டில் செலுத்தப்பட்ட, TDS மற்றும் வரிகளின் சுருக்கத்தை வரி செலுத்துபவருக்கு வழங்குகிறது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்பு, எந்த ITR படிவத்தைப் நிரப்ப வேண்டும் என்பதை வரி செலுத்துபவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் வருமான வரி அறிக்கையை ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் வரி செலுத்துபவருக்கு ITR 1 மற்றும் ITR 4 ஆகிய இரண்டு படிவங்கள் மட்டுமே உள்ளன. மற்ற அனைத்து வருமான வரி படிவங்களும் ஆஃப்லைனில் பதிவேற்றப்பட வேண்டும் (XML வடிவத்தில் அவற்றை உருவாக்கி பதிவேற்றம் செய்தல்) .
www.incometax.gov.in தளத்தில், மெனு பட்டியிலிருந்து ‘பதிவிறக்கங்கள்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
வருமான வரி மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து ஆஃப்லைன் பயன்பாட்டு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவும்; அதாவது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மைக்ரோசாப்ட் எக்செல் அல்லது ஜாவா, அல்லது JSON பயன்பாடு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவும். AY 2020-21-ஆம் ஆண்டிலிருந்து எக்செல் மற்றும் ஜாவா பயன்பாடு ஆகியன வருமான வரித் துறையால் நிறுத்தப்பட்டுள்ளது
ஆஃப்லைன் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்த பிறகு, உங்கள் வருமானம் சம்பந்தப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும், செலுத்த வேண்டிய வரி அல்லது திரும்பப் பெறும் தொகையை பயன்பாட்டின் கணக்கீடுகளின்படி சரிபார்க்கவும். வருமான வரி செலுத்துச் சீட்டு (challan) விவரங்களை பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தில் நிரப்பலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தின் வலது பக்கத்தில் சில பொத்தான்களை நீங்கள் காணலாம். தேவையான அனைத்து தகவல்களும் நிரப்பப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திட "சரிபார்க்கப்பட்டது" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
சரிபார்க்கப்பட்ட பிறகு, கோப்பை XML வடிவமாக மாற்றுவதற்கு, கோப்பின் வலது பக்கத்தில் உள்ள ’XML வடிவத்தை உருவாக்கு’ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்போது, வருமான வரி இ-பைலிங் போர்ட்டலுக்குள் உள்நுழைந்து, ‘வருமான வரி அறிக்கை’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க 'இ-பைல்‘ டேபை கிளிக் செய்யவும்.
பான் எண், மதிப்பீட்டு ஆண்டு, ITR படிவம் எண் மற்றும் சமர்ப்பிப்பு முறை போன்ற தேவையான விவரங்களை வழங்கிடுங்கள். கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளபடி "சமர்ப்பிப்பு முறை" என்ற புலத்தின் பெயருக்கு ஏற்ப "XML-ஐ பதிவேற்றுக" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது, உங்கள் கணினியிலிருந்து XML கோப்பை இணைத்து, "சமர்ப்பி" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
சரிபார்ப்பு முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் - ஆதார் OTP, மின்னணு சரிபார்ப்பு குறியீடு (EVC), அல்லது கையொப்பமிடப்பட்ட ITR-V நகலை CPC, பெங்களூருக்கு அனுப்புதல்.
ஒருவரின் வருமானமானது அடிப்படை விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால் அல்லது வெளிநாட்டு பயணத்திற்கான செலவுகள் ரூ.2 லட்சம் என இருந்தால், மின்சார நுகர்வு ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், FY 2019-20 அல்லது அதற்குப் பின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில்.ரூ.1 கோடிக்கு மேல் ஒரு தொகை/மொத்தமாக டெபாசிட் செய்திருந்தால், அத்தகைய தனி நபர்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வது காட்டாயம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் அல்லது இந்தியாவுக்கு வெளியே கணக்கு அடிப்படையிலான கையொப்பமிடும் அதிகாரம் உள்ள குடியிருப்பாளரின் விஷயத்தில். வருமான வரியின் பலன்களுக்கு நீங்கள் தகுதியற்றவராக இருந்தாலும் உங்கள் ITR-ஐத் தாக்கல் செய்வது நல்லது.
வருமான வரி என்பது உங்கள் வருமானத்திற்கான நேரடி வரி. அதாவது, உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியானது அரசாங்கத்திற்கு செலுத்தப்படுகிறது. இந்தத் தொகையை சுகாதாரம், கல்வி, விவசாயத்திற்கு மானியம், உள்கட்டமைப்பு போன்றவற்றுக்காக அரசாங்கம் வசூலிக்கிறது. தனிநபர்/HUF/வரி செலுத்துபவரால், ஒரு நிதி ஆண்டில் வருமான நிலைகள் அல்லது லாபங்களைப் பொறுத்து இது செலுத்தப்படுகிறது. வருமானத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், ஒரு நிறுவனமானது வருமான வரியை செலுத்த வேண்டும். அவ்வப்போது, அரசாங்கம் உங்கள் வருமானம் மீதான வரி விகிதத்தை நிர்ணயிக்கும் சட்டங்களை, இயற்றுகிறது.
உங்கள் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பு நீங்கள் வரியை செலுத்தியிருக்க வேண்டும். நீங்கள் ஒரு சம்பளம் பெறும் நபராக இருந்தால், உங்கள் வரியில் பெரும்பாலானவை, TDS வடிவத்தில், உங்கள் முதலாளியால் உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டு உங்கள் சார்பாக அரசாங்கத்திற்கு செலுத்தப்படுகின்றது. நீங்கள் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டியதாயிருந்தால், ஒவ்வொரு நிதியாண்டிலும் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் 90% வரியை செலுத்தியிருக்க வேண்டும். நிதி ஆண்டு முடிந்ததும் உங்கள் ITR--ஐத் தாக்கல் செய்யலாம்.
ITR தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு, சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை 31 வரை நடப்பில் இருக்கும். இருந்தாலும், ITR தாக்கல் செய்ய வேண்டிய தேதி நீட்டிக்கப்படலாம்; IT துறையானது, அறிவிப்புகள் மூலம் இதை அவ்வபோது அறிவிக்கும். உங்கள் ITR-ஐ உரிய தேதிக்குள் தாக்கல் செய்வது நல்லது. மதிப்பீட்டு ஆண்டின் இறுதி தேதிக்குள் நீங்கள் ITR-ஐத் தாக்கல் செய்யத் தவறினால், தாமதமாகத் தாக்கல் செய்யும் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான திட்டமிடல் மூலம் வருமான வரியைக் குறைக்க பல வழிகள் உள்ளன. வருமான வரிச் சட்டம் சில தள்ளுபடிகளையும் விலக்குகளையும் வழங்குகிறது, இது உங்கள் மொத்த வரி விதிப்புக்கான வருமானத்தை குறைக்கும் மற்றும் செலுத்த வேண்டிய வரியை குறைக்கும். கீழே சில பொதுவான தள்ளுபடிகள் மற்றும் விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன:
நீங்கள் வருமான வரி இ-பைலிங் போர்ட்டல் மூலமாகவோ அல்லது ClearTax மூலமாகவோ உங்கள் ITR வருமானத்தை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். நீங்கள் அரசாங்க போர்ட்டல் வழியாக அறிக்கையைத் தாக்கல் செய்ய விரும்பினால், நீங்கள் அதை "ஆஃப்லைன்" அல்லது "ஆன்லைன்" முறையைப் பயன்படுத்தி தாக்கல் செய்ய வேண்டும்.