ஆதார்-பான் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு வேகமாக நெருங்கி வருகிறது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் கார்டை, செயல்பாட்டில் வைத்திருக்க, அதனை ஆதார் கார்டுயுடன் இணைக்க வேண்டும். இருப்பினும், இது ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்று பலருக்கு சந்தேகம் இருக்கலாம். எனவே, உங்கள் ஆதார், பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். கீழே உள்ள கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளபடி, பான் உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் செயல்முறை எளிதானது. பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், ரூ.1,000 அபராதம் செலுத்தி 30 ஜூன் 2023-க்குள் இணைக்க வேண்டும்..
வருமான வரி செலுத்துபவர்கள், தங்களது ஆதார் எண்ணை 30 ஜூன் 2023 அன்று அல்லது அதற்கு முன்னர் நிரந்தர கணக்கு எண் (PAN) கார்டுகளுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள், தங்கள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால், 1 ஜூலை 2023 முதல் அத்தகைய பான் கார்டுகள் செயலிழந்ததாகும். ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் ஆதார்-பான் கார்டு இணைப்பு நிலையை சரிபார்க்கும் செயல்முறையைக் காண்போம்.
உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க இரண்டு வழிகள் உள்ளன, அவை பின்வருமாறு
படிநிலை 1: வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்.
படிநிலை 2: "விரைவு இணைப்புகள்" தலைப்பின் கீழ், "ஆதார் இணைப்பு நிலைமை" என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 3: ‘பான் எண்‘ மற்றும் ’ஆதார் எண்‘ ஆகியவற்றை உள்ளிட்டு, ‘ஆதார் இணைப்பு நிலைமையைப் பார்த்தல்’ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
வெற்றிகரமான சரிபார்ப்பில், உங்கள் ஆதார் இணைப்பு நிலைமை குறித்த செய்தி காண்பிக்கப்படும். உங்கள் ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது பின்வருமாறு செய்தி காண்பிக்கப்படும்: (கீழே காட்டப்பட்டுள்ளபடி) "உங்கள் பான் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது".
உங்கள் ஆதார்-பான் இணைப்பு செயலில் இருக்கும்போது, பின்வரும் செய்தி திரையில் தோன்றும் - “உங்கள் ஆதார்-பான் இணைப்பு கோரிக்கையானது, சரிபார்ப்புக்காக UIDAI-க்கு அனுப்பப்பட்டுள்ளது. முகப்புப் பக்கத்தில் ‘ஆதார் இணைப்பு நிலைமை‘ இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் இந்த நிலைமையை சிறிது காலத்திற்குப் பின்னர் சரிபார்க்கவும்.
உங்கள் ஆதார், பான் கார்டுடன் இணைக்கப்படாவிட்டால், பின்வரும் செய்தி திரையில் தோன்றும் - "ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை. உங்கள் ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைக்க, (கீழே காட்டப்பட்டுள்ளபடி) ‘ஆதார் இணைப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 1: வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்நுழையவும்.
படிநிலை 2: முகப்புப்பக்கத்தில் உள்ள ‘டேஷ்போர்டு’க்குச் சென்று, ‘ஆதார் இணைப்பு நிலைமை’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படிநிலை 3: நீங்கள் "எனது சுயவிவரம்" என்பதிலும் சென்று "ஆதார் இணைப்பு நிலைமை" என்ற விருப்பத்தை கிளிக் செய்யலாம்.
உங்கள் ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்பபட்டிருக்கும் போது, ஆதார் எண் திரையில் காண்பிக்கப்படும். உங்கள் ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால், ‘ஆதார் இணைப்பு நிலை’ என்று காண்பிக்கப்படும்.
உங்கள் ஆதார் கார்டை, உங்கள் பான் கார்டுடன் இணைப்பதற்கான, உங்கள் கோரிக்கையானது சரிபார்ப்பதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) நிலுவையில் இருக்கும்போது, நீங்கள் சிறிது காலத்திற்குப் பின்னர், அந்த நிலைமையை சரிபார்க்க வேண்டும்.
இங்கே, ஆதார் பான் கார்டு இணைப்பு நிலைமையை சரிபார்ப்பதற்கான நேரடி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது - https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhar-adhar-atus
உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, "ஆதார் இணைப்பு நிலைமையைப் பார்த்தல்" என்பதைக் கிளிக் செய்யவும். பான்-ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலைமை திரையில் காண்பிக்கப்படும்.
படிநிலை 1: பின்வருமாறு எஸ்எம்எஸ் எழுதுங்கள் - UIDPAN <12 இலக்க ஆதார் எண்> < 10 இலக்க பான் எண்>.
படிநிலை 2: "567678" அல்லது "56161" எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.
படிநிலை 3: அரசாங்க சேவையிடமிருந்து, பதிலுக்காக காத்திருங்கள்.
ஆதார் எண், பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, பின்வருகின்ற செய்தி தோன்றும்: “ITD தரவுத்தளத்தில், ஆதார் ஏற்கனவே பான் (எண்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தியதற்கு நன்றி.”
ஆதார் எண், பான் எண்ணுடன் இணைக்கப்படாத போது, பின்வருகின்ற செய்தி தோன்றும்: “ITD தரவுத்தளத்தில், ஆதார் எண், பான் (எண்) உடன் இணைக்கப்படவில்லை. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தியதற்கு நன்றி.”
உங்கள் ஆதார் எண்ணானது, உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால், தாமதத்திற்கு அபராதமாக வருமான வரி இணையதளத்தில் 1000 ரூபாய் செலுத்துவதன் மூலம் ஆதார்-பான் இணைப்பைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். பான்-ஆதார் எண்ணை இணைப்பதற்கு, அபராதம் செலுத்துவதற்கான படிநிலைகளைப் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும். அபராதம் செலுத்திய பிறகு, உங்கள் ஆதார் எண்ணை, உங்கள் பான் எண்ணுடன் இணைக்க கீழே உள்ள படிநிலைகளைப் பின்பற்றவும்:
படிநிலை 1: வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச்செல்லவும்.
படிநிலை 2: விரைவு இணைப்புகள்" தலைப்பின் கீழ், " ஆதார் இணைப்பு நிலை" என்பதைக் கிளிக் செய்யவும்."
படிநிலை 3: ‘பான் எண்‘ மற்றும் ’ஆதார் எண்‘ ஆகியவற்றை உள்ளீடு செய்து, 'சரிபார்த்தல்‘ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 4: ஒரு பாப்-அப் செய்தி தோன்றும் - அபராதக் கட்டணம் சரிபார்க்கப்படும் போது "உங்கள் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டன". பின்னர், ‘தொடர்க’ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 5: விவரங்களை உள்ளீடு செய்து, ‘ஆதார் இணைப்பு‘ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படிநிலை 6: உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள OTP ஐ உள்ளீடு செய்யவும்.
படிநிலை 7: ஆதார்-பான் கார்டு இணைக்கும் கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பான் கார்டு மையத்திற்குச் சென்று, இரண்டு கார்டுகளையும் இணைத்திட ஆதார்-பான் கார்டு இணைக்கும் கோரிக்கைப் படிவத்தையும் சமர்ப்பிக்கலாம்.
பான்-ஆதார் இணைப்பு 31 மார்ச் 2022 வரை இலவசம் ஆகும். 31 மார்ச் 2022-க்குப் பிறகு ஆனால், 30 ஜூன் 2022 -க்குள், பான் எண்ணை-ஆதார் எண்ணுடன் இணைத்தால், ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், 30 ஜூன் 2022-க்குப் பிறகு, பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, 30 ஜூன் 2023க்கு முன் உங்கள் ஆதாரை, உங்கள் பான் எண்ணுடன் இணைக்க ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். 30 ஜூன் 2023-க்கு முன் பான் மற்றும் ஆதார் கார்டுகள் இணைக்கப்படாவிட்டால், 1 ஜூலை 2023 முதல் பான் கார்டுகள் செயலிழந்துவிடும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139A-ன் படி, வரி செலுத்துபவர்கள் தங்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும். எனவே, வரி செலுத்துபவர்கள் அனைவரும் ரூ.1,000 அபராதம் செலுத்தி, 30 ஜூன் 2023-க்குள் தங்களது ஆதார் கார்டுடன் தங்களது பான் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் பான் கார்டுகள் செயலிழந்துவிடும்.
இருப்பினும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு-காஷ்மீர் குடியிருப்பாளர்கள், விதிவிலக்கின் கீழ் வருவதால், அவர்கள் தங்கள் ஆதார் கார்டை, பான் கார்டுடன் இணைக்கத் தேவையில்லை. ஆதார் கார்டு உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க உங்கள் ஆதார்-பான் இணைப்பு நிலைமையை சரிபார்க்கவும். அது இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் பான் கார்டு செயலிழப்பதைத் தடுக்க 30 ஜூன் 2023-க்குள் இணைப்பதை உறுதி செய்யவும்.