உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பித்தல் – ஆதார் புதுப்பித்தல் செயல்முறை, முகவரி மாற்றம்

Updated on: Jun 28th, 2023

|

40 min read

Switch Language

social iconssocial iconssocial iconssocial icons

ஆதார் என்பது உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பு ஆகும்; இதில், தனிநபர்களுக்கு பயோமெட்ரிக்குடன் இணைக்கப்பட்டுள்ள, ஒரு தனித்துவமான 12 இலக்க எண் வழங்கப்படுகிறது. அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு, ஆதார் கட்டாயமாக்கப்படும் என்று எதிர்காலத்தில் கூறுவது மிகையாக இருக்காது.  ஆதார் அட்டை முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்றாகவும் செயல்படுகிறது.

ஆகவே, ஆதார் அட்டையில் உள்ள அனைத்து விவரங்களும், தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெற முடியாது. உங்கள் தகவல் அல்லது பயோமெட்ரிக்கில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், நீங்கள் உடனடியாக ஆதார் அட்டை புதுப்பித்தலுக்குச் செல்ல வேண்டும்.

 

UIDAI ஆதார் புதுப்பிப்புக்கு நீங்கள் எப்போது செல்ல வேண்டும்?

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய சில சூழ்நிலைகள் இருக்கலாம். மிகவும் பொதுவான சில சூழ்நிலைகள்: –

  • உங்களது தகவல் தொடர்பு விவரங்களில் மாற்றம் (மொபைல் எண் அல்லது முகவரி)
  • உங்கள் பெயரில் மாற்றம் (திருமணத்திற்குப் பிறகு அல்லது விருப்பத்தின் பேரில்)
  • பதிவு செயல்முறையின் போது ஆபரேட்டரின் எழுத்துப் பிழைகள்
  • விபத்து காரணமாக பயோமெட்ரிக்கில் மாற்றம் (கைரேகை, கண் விழி)
  • உள்ளூர் மொழியில் மாற்றம்
  • பதிவு செய்யும் போது கைப்பற்றப்பட்ட பயோமெட்ரிக்ஸின் தரம் மதிப்பெண் வரை இல்லை.
  • 5 வயது மற்றும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் ஆதார் அட்டையை புதுப்பித்தல்
  •  UIDAI-ஆல் கூடுதல் ஆவணங்களுக்கான கோரிக்கை 
  • பல அங்கீகார தோல்விகள் ஏற்படுதல்

ஆதார் அட்டை புதுப்பித்தலுக்குத் தேவையான ஆவணங்கள்

உங்கள் ஆதார் தரவை புதுப்பிக்கத் தேவையான ஆவணங்கள், தேவைப்படும் மாற்றத்தின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். ஆவணங்களின் விரிவான பட்டியலை UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் காணலாம்: – https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf

ஆதார் அட்டை புதுப்பித்தல் செயல்முறை

ஆதார் அட்டை புதுப்பித்தல் செயல்முறை இரண்டு வழிமுறைகள் மூலம் செய்யப்படலாம், அதாவது ஆன்லைன் போர்ட்டல் மூலம் அல்லது பதிவு மையம் மூலமாக. மேலே உள்ள இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் மக்கள் தொகை பற்றிய தகவலை புதுப்பிக்க முடிந்தாலும், பயோமெட்ரிக் தரவை புதுப்பிப்பது பதிவு மையத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.  UIDAI ஆதார் புதுப்பிதத்தலில் உங்களுக்கு உதவ, இங்கே விரிவான வழிகாட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 

1. ஆன்லைன் போர்ட்டல் மூலம் ஆதார் அட்டை திருத்தம்

ஆதார் அட்டை எண் புதுப்பிப்பு அல்லது முகவரி புதுப்பித்தல் போன்ற உங்கள் ஆதார் எண்ணில் உள்ள மக்கள்தொகைத் தரவை மாற்ற அல்லது புதுப்பிக்க விரும்பினால்நீங்கள் UIDAI இன் சுய சேவை போர்ட்டலுக்கு உள்நுழையலாம் மற்றும் ஆன்லைனில் எந்தவொரு ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம். 

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணைப் புதுப்பித்தல் அல்லது ஆன்லைனில் முகவரியைப் புதுப்பித்தல் போன்ற உங்கள் ஆதாரில் உள்ள தரவை மாற்ற அல்லது புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் UIDAI-ன் சுய-சேவை போர்ட்டலில் உள்நுழைந்து ஆன்லைனில் ஆதார் அட்டை திருத்தத்திற்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றலாம்..

 

  • அதிகாரப்பூர்வ UIDAI வலைத்தளத்திற்குச் செல்லவும் https://uidai.gov.in/.
  • “உங்கள் ஆதாரைப் புதுப்பித்தல்” என்ற தலைப்பில் உள்ள பிரிவைக் கண்டுபிடித்து, பின்னர் “மக்கள்தொகைத் தரவைப் புதுப்பித்தல் மற்றும் நிலைமையைச் சரிபார்த்தல்” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

 

  • அடுத்த பக்கத்தில், "உள்நுழை" பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, கேப்ட்சா குறியீட்டை தட்டச்சு செய்து, "OTP அனுப்பு" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP-ஐப் பெறுவீர்கள். OTP-யில் கேட்கும் போது தட்டச்சு செய்யவும். இது உங்களது ஆதார் புதுப்பிப்பு போர்ட்டலுக்கு அழைத்துச் செல்லும்.
  • அடுத்த பக்கத்தில், "ஆன்லைனில் ஆதார் புதுப்பித்தல்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து, "ஆதார் புதுப்பிக்க தொடரவும்" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இங்கே, நீங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி போன்ற புதுப்பிக்க விரும்பும் மக்கள்தொகைத் தகவலைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • நீங்கள் புதுப்பிக்க விரும்பும் மக்கள்தொகைத் தேர்வைத் தேர்ந்தெடுத்த பிறகு, "ஆதார் புதுப்பிக்க தொடரவும்" என்ற விருப்பத்தைத் தட்டவும். இப்போது, புதுப்பிக்கப்பட்ட தகவலை உள்ளிடவும். நீங்கள் சரியான மற்றும் புதுப்பித்த தகவலை உள்ளிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் ஆதார் தரவில் உள்ள அனைத்து தகவல்களும் துல்லியமாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். அடுத்து, தேவையான ஆவணத்தைப் பதிவேற்றி, “அடுத்து” என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • PIN குறியீடு, மாவட்டம், அஞ்சல் அலுவலகம், மாநிலம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஏதேனும் தகவலை நீங்கள் மாற்ற வேண்டியிருந்தால், help@uidai.gov.in என்ற முகவரியில் UIDAI உதவியை நாடவும்.
  • புதுப்பிக்கப்பட்ட விவரங்களின் முன்னோட்டத்தை நீங்கள் காண்பீர்கள். அடுத்தது, கட்டணத்தைச் செய்து, "சமர்ப்பி" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • இது ஒரு URN-ஐ உருவாக்கும். பின்னாளில், ஆதார் அட்டை புதுப்பிப்பு நிலைமையை சரிபார்க்க வேண்டியிருக்கும் என்பதால், பாதுகாப்பான இடத்தில் URN-ஐக் குறித்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது நீங்கள் ஒப்புகையின் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
  • பொதுவாக, தகவல் புதுப்பிக்கப்பட சில வேலை நாட்கள் ஆகும். போர்ட்டலில் உள்ள URL-ஐப் பயன்படுத்தி, உங்கள் புதுப்பிப்பு கோரிக்கையின் நிலைமையை நீங்கள் சரிபார்க்கலாம்.
  • உங்கள் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுவிட்டால், உங்கள் முகவரிக்கு அஞ்சல் மூலம் உங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையைப் பெறுவீர்கள். ஏதேனும் காரணத்திற்காக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதே காரணத்திற்காக நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

2. பதிவு மையம் மூலம் ஆதார் அட்டை திருத்தம் செய்தல்

உங்களிடம் இணையம் மற்றும் கணினி இல்லையென்றால் அல்லது உங்கள் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தால், உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு நீங்கள் செல்லலாம். பதிவு மையம் மூலம் ஆதார் விவரங்களை மாற்றுவது சம்பந்தப்பட்ட படிநிலைகள் பின்வருமாறு:- UIDAI போர்ட்டல் மூலம் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைக் கண்டறியவும்.

  • நீங்கள் எந்தவொரு முன் நியமனத்தையும் செய்ய வேண்டியதில்லை மற்றும் உங்கள் வசதிக்கேற்ப நிரந்தர பதிவு மையத்திற்குச் செல்லலாம்.
  • சம்பந்தப்பட்ட தகவல் தொடர்பு மாற்றத்திற்குத் தொடர்புள்ள, உங்கள் அனைத்து ஆவணங்களின் அசல் பிரதிகளை நீங்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான ஆவணங்களின் பட்டியல் -  https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf
  • ஆபரேட்டர் உங்கள் விவரங்களை சரிபார்த்து, உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருந்தால், பின்னர் ஆபரேட்டர் ஆன்லைனில் ஆதார் அட்டை திருத்தம் என்பதைத் தொடர்வார்.
  • ஆபரேட்டர் மென்பொருளில் உள்ள அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, (தேவைப்பட்டால்) உங்கள் பயோமெட்ரிக்கை எடுத்து, உங்கள் ஆவணங்களின் நகல்களை ஸ்கேன் செய்யவார்.
  • செயல்முறை முடிந்ததும், நீங்கள் ஒப்புகை ரசீதை பெறுவீர்கள், அது URN-ஐக் கொண்டிருக்கும்.
  • UIDAI போர்ட்டல் மூலம் உங்கள் ஆதார் எண்ணுக்கான புதுப்பித்தல் கோரிக்கையின் நிலைமையை நீங்கள் கண்காணிக்கலாம்.
  • உங்கள் ஆவணங்கள் சரியாக இருந்தால், சில வேலை நாட்களில் உங்கள் முகவரியில் புதுப்பிக்கப்பட்ட ஆதார் நகலைப் பெறுவீர்கள்.

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியமானது, இல்லையெனில் நீங்கள் பெறக்கூடிய பல பலன்களை நீங்கள் இழக்க நேரிடும். ஆன்லைன் போர்ட்டல் மற்றும் நிரந்தர பதிவு மையத்தின் உதவியுடன், ஆதார் அட்டை புதுப்பித்தல் செயல்முறை வசதியாகிவிட்டது. 

உங்கள் ஆதார் தரவு புதுப்பிக்கப்பட வேண்டும் எனில், நீங்கள் விரைந்து செயல்பட்டு பொருத்தமான ஆன்லைன் சேனல்கள் மூலம் செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.

 

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் - ஆதார் அட்டையில் பெயரை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பான் எண்ணுடனான ஆதார் எண்ணின் கட்டாய இணைப்பால், தன்னார்வ பதிவுகள் மற்றும் கிட்டத்தட்ட உலகளாவிய பயன்பாட்டின் காரணமாக, ஆதார் இந்திய குடியிருப்பாளர்களுக்கு மிகவும் முக்கியமான அடையாள ஆதாரமாக மாறியுள்ளது. இது, இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தால் (UIDAI) குடியிருப்பாளர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான எண் ஆகும். பதிவு செய்யப்பட்டுள்ள பதிவு மையங்கள் மூலம் பெயர் மாற்றம் செயல்முறை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யப்படலாம். இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்குச் செல்வதன் மூலம் மட்டுமே, முதல் பெயர்களை ஆஃப்லைனில் மாற்ற முடியும். ஆன்லைன் பயன்முறையில் ஆதார் அட்டையில் பெயர் மாற்ற செயல்முறை பற்றி அறிய மேலும் படிக்கவும். 

ஆதார் அட்டையில் பெயர் மாற்றத்திற்குத் தேவையான ஆவணங்கள் யாவை?

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, UIDAI போர்ட்டல் சிறிய அளவிலான பெயர் மாற்றங்களை எளிதாக்கியுள்ளது. பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சில பிரபலமான அடையாளச் சான்றுகள் (POI):

  • பாஸ்போர்ட்
  • PAN 
  • வாக்காளர் அடையாள அட்டை
  • ரேஷன் கார்டு/PDS அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • புகைப்படத்துடன் கூடிய அரசு வழங்கிய திருமண சான்றிதழ்
  • ஓய்வூதிய அட்டை
  • ஊனமுற்றோர் அட்டை
  • மாநில/மத்திய அரசு./PSUs வழங்கிய புகைப்படத்துடன் கூடிய CGHS/ECHS/ESIC/ Medi-Claim கார்டு

 

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் - ஆன்லைனில் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?

இந்தியாவில் வசிப்பவர்களின் அடையாளச் சான்றாக செயல்படுகின்ற, ஆதார் என்பது 12 இலக்க தனித்துவமான எண் ஆகும், இது ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் தனித்துவமானது; அடிப்படை பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகைத் தரவை UIDAI அல்லது இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்திற்கு வழங்குவதன் மூலம் தன்னார்வமாக இதனைப் பெறலாம். இருப்பினும், ஆதார் என்பது குடியிருப்புக்கான சான்று மட்டுமே, இந்தியாவின் குடியுரிமை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் முகவரியை ஆதார் எண்ணில் மாற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதாவது இடம்பெயர்தல், எழுத்துரு அல்லது பின் குறியீட்டு பிழைகள். ஆதார் பதிவு செய்யப்பட்ட மையங்களில் மட்டுமே பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க முடியும் என்றாலும், எந்தவொரு மையத்திற்கும் செல்லாமல் உங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஆன்லைனில் ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கான வழிகாட்டி இங்கே பகிரப்படுகிறது. 

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் யாவை?

UIDAI போர்டல், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முகவரிகளை புதுப்பிப்பதை மிகவும் எளிதாக்கியுள்ளது.. 28-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சில பிரபலமான முகவரி சான்றுகள் (POA):

  • பாஸ்போர்ட் (சுய/மனைவி/மைனர் என்றால் பெற்றோர்)
  • வங்கி அறிக்கை (பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை)
  • ரேஷன் கார்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • ஓய்வூதிய அட்டை
  • ஊனமுற்றோர் அட்டை
  • மாநில/மத்திய அரசு./PSUs வழங்கிய புகைப்படத்துடன் கூடிய CGHS/ECHS/ESIC/ Medi-Claim கார்டு
  • மின்கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்குட்பட்டது), முன்னரே கட்டப்பட்ட ரசீதுகள் உட்பட 
  • குடிநீர் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்குட்பட்டது) 
  • தொலைபேசி லேண்ட்லைன் ரசீது/ தொலைபேசி (போஸ்ட்பெய்ட் மொபைல்) பில்/ பிராட்பேண்ட் பில் (மூன்று மாதங்களுக்குட்பட்டது) 
  • ஆயுள் காப்பீட்டு பாலிசி (ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு மட்டும்) 
  • சொத்து வரி ரசீது (ஒரு வருடத்திற்கு உட்பட்டது)

உங்கள் பாஸ்போர்ட், பான் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாளச் சான்றுகளை நீங்கள் வைத்திருக்க வேண்டும். 

ஆதார் அட்டை முகவரி மாற்றப் படிவம்

உங்கள் முகவரியை புதுப்பிப்பதற்கான படிவம் UIDAI-ன் ஆதார் போர்ட்டலில், அதாவது, நீங்கள் ஆன்லைன் புதுப்பித்தல் முறையைத் தேர்வு செய்தால்  https://myaad.uidai.gov.in/ என்பதில் கிடைக்கும்.. மாறாக, நீங்கள் ஒரு படிவத்தை நிரப்பி, பதிவு செய்யப்பட்ட மையத்தில் புதுப்பிக்கலாம். 

ஆதாரில் முகவரியை எப்படிப் புதுப்பிப்பது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை விவரங்களுடன் உங்கள் ஆதார் எண்ணை புதுப்பிக்க ஆணையம் அறிவுறுத்துகிறது. முகவரியைப் புதுப்பித்தலுக்கான விரிவான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • எனது ஆதார் போர்ட்டலை ஆன்லைனில் தேடி, உள்நுழையவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும். 
  • உள்நுழைந்த பிறகு, "பெயர்/பாலினம்/பிறந்த தேதி & முகவரி புதுப்பித்தல்" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் 
  • "ஆன்லைனில் ஆதார் புதுப்பித்தல்" என்பதைக் கிளிக் செய்யவும்
  • ஆன்லைன் படிவத்தில், புதுப்பிக்கப்பட வேண்டிய மக்கள்தொகைப் புலங்களின் பட்டியலிலிருந்து ‘முகவரி’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, 'ஆதார் புதுப்பித்தளைத் தொடரவும்‘என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தேவையான மக்கள்தொகைத் தகவலை உள்ளிட்டு, அசல் ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவும். 
  • திரும்பப் பெற முடியாத கட்டணம் ரூ.50-ஐ செலுத்தவும்
  • ஒரு சேவை கோரிக்கை எண் (SRN) உருவாக்கப்படும். அதை பின்னர் நிலைமையைக் கண்காணிப்பதற்கு சேமித்து வைக்கவும். 
  • உள் தரச் சரிபார்ப்பை முடித்தவுடன், நீங்கள் ஒரு SMS-ஐப் பெறுவீர்கள்

ஆதாரச் சான்று இல்லாமல் எனது ஆதார் அட்டையில் உள்ள முகவரியை எப்படி மாற்றுவது?

உங்களிடம் செல்லுபடியாகும் POA (முகவரியின் சான்று) இல்லையென்றால், ஆன்லைனில் புதுப்பிப்பு படிவத்தை இணைக்க உங்களுக்கு முகவரிச் சரிபார்ப்பு கடிதம் தேவைப்படும். இது குடியிருப்பாளரின் குடும்ப உறுப்பினர், உறவினர், நில உரிமையாளர் அல்லது நண்பராக இருக்கக்கூடிய முகவரி சரிபார்ப்பாளரின் ஒப்புதலை உள்ளடக்கியது. இந்த வழிமுறையின் செயல்முறை பின்வருமாறுஃ

  • UIDAI போர்ட்டலுக்குச் சென்று ஆதார் அட்டை பிரிவுக்குச் செல்லவும். "ஆன்லைனில் ஆதார் அட்டையைப் புதுப்பித்தல்" என்ற பிரிவில், "சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை" என்பதைக் கிளிக் செய்யவும். 
  • சரிபார்ப்பாளரின் ஆதார் எண்ணை உள்ளிட்டு SRN-ஐப் பெறுங்கள் 
  • ஆதார் மூலம் ஒப்புதலை வழங்க ஒரு இணைப்பை சரிபார்ப்பாளர் பெறுவார். 
  • நீங்கள் ஒப்புதல் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்; SRN கொண்டு உள்நுழைந்து, முகவரியை முன்னோட்டமாகப் பார்க்கவும், விரும்புகின்ற உள்ளூர் மொழியைத் தேர்ந்தெடுத்து, கோரிக்கையை சமர்ப்பிக்கவும்
  • ஒரு ரகசிய குறியீடு மற்றும் அஞ்சல் மூலம் கடிதத்தை நீங்கள் பெறுவீர்கள். இந்த குறியீட்டுடன் உள்நுழைந்து, உங்கள் முகவரியை புதுப்பித்து, கோரிக்கையை சமர்ப்பிக்கவும், கண்காணிப்புக்கான URN-ஐ உருவாக்கவும். 

ஆதார் அட்டையில் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

UIDAI-ன் படி, ஆதார் அட்டை முகவரி மாற்ற நேரமானது, விண்ணப்பத்தை சமர்ப்பித்ததிலிருந்து அதிகபட்சம் 30 நாட்களுக்குள் அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், கணினி மேம்பாடு காரணமாக, கோரிக்கை ஒரு சில நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படுகிறது/நிராகரிக்கப்படுகிறது. 

ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பித்தல் நிலைமை

ஆன்லைனில் உங்கள் ஆதார் புதுப்பித்தல் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பித்தவுடன், நீங்கள் ஒரு URN அல்லது புதுப்பித்தல் கோரிக்கை எண்ணைப் பெறுவீர்கள்.  இந்த இணைப்பின் மூலம் கோரிக்கையின் நிலைமையை நீங்கள் கண்காணிக்கலாம். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆன்லைன் ஆதார் புதுப்பிப்பு இலவசமா?

இல்லை, ஆதாரில் புதுப்பிப்பதற்கான கட்டணம் பின்வருமாறு- 

  1. கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இலவசம் 
  2. மக்கள்தொகை புதுப்பித்தல் (எந்த வகைக்கும்) - ரூ. 50/- (ஜிஎஸ்டி உட்பட) 
  3. பயோமெட்ரிக் புதுப்பித்தல் - ரூ. 100/- (ஜிஎஸ்டி உட்பட) 
  4. மக்கள்தொகை புதுப்பித்தலுடன் பயோமெட்ரிக் ரூ. 100/-(வரிகள் உட்பட) 
  5. A4 தாளில் ஆதார் பதிவிறக்கம் மற்றும் வண்ண அச்சடிப்பு - ஆதார் ஒன்றுக்கு ரூ.30/- (ஜிஎஸ்டி உட்பட)

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கான கட்டணம் என்ன?

ஆன்லைனில் ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கான விலை ரூ.50

எனது ஆதார் அட்டையை விரைவாக புதுப்பிப்பது எப்படி?

ஆதார் பதிவு மையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, ஆன்லைனில் முகவரி போன்ற மக்கள்தொகை விவரங்களை நீங்கள் புதுப்பிக்கலாம். 

முகவரி மாற்றத்திற்காக நான் எனது தந்தையின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாமா?

ஆம், முகவரிக்கான சரியான ஆதாரச் சான்று உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் முகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த கடிதத்தில், நீங்கள் உங்கள் தந்தையின் ஆதார் எண்ணை சரிபார்ப்பு ஆதார் அட்டையாகப் பயன்படுத்தலாம். 

திருமணத்திற்குப் பிறகு ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?

உங்கள் முகவரியை ஆன்லைனில் அல்லது பதிவு செய்யப்பட்ட பதிவு மையங்களில் புதுப்பிக்கலாம். முகவரியின் செல்லுபடியாகும் சான்று உங்களிடம் இல்லையென்றால், முகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான சரிபார்ப்பாளராக உங்கள் கணவரின் ஆதார் எண்ணை நீங்கள் சேர்க்கலாம். 

திருமணத்திற்குப் பிறகு ஆதார் அட்டையில் பெயரை மாற்ற விரும்பினால், நான் எந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?

முகவரியை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் மாற்றலாம். உங்கள் பெயர் மற்றும் முகவரியை உள்ளடக்கிய ஒரு POA அல்லது முகவரியின் சான்று உங்களுக்குத் தேவை. 

ஆதார் முகவரி மாற்றத்திற்கு வங்கி அறிக்கை போதுமா?

ஆம், உங்கள் பெயர் மற்றும் முகவரியை உள்ளடக்கிய முகவரி சம்பந்தப்பட்ட எந்த ஆதாரமும் போதுமானது. 

ஆதார் அட்டையில் எத்தனை முறை முகவரியை மாற்றலாம்?

அனுமதிக்கப்பட்ட முகவரி மாற்றங்களின் எண்ணிக்கையில் வரம்பு எதுவும் இல்லை. 

எனது ஆதார் அட்டையில் எனது குடும்ப முகவரியை எவ்வாறு மாற்றுவது?

குடும்ப உறுப்பினரின் ஆதாரில் உள்ள முகவரியை நீங்கள் மாற்றினால், அவர்களிடம் சரியான ஆதாரச் சான்று இல்லை என்றால், முகவரி சரிபார்ப்புக் கடிதத்தின் சரிபார்ப்பாளராக உங்களைச் சேர்க்கலாம்.

எனது மனைவிக்கு ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?

உங்கள் மனைவியின் ஆதாரில் உள்ள முகவரியை நீங்கள் மாற்றினால், அவரிடம் சரியான ஆதாரச் சான்று இல்லை என்றால், முகவரி சரிபார்ப்புக் கடிதத்தின் சரிபார்ப்பாளராக உங்களைச் சேர்க்கலாம்.

எனது கணவருக்கு ஆதார் அட்டையின் முகவரியை எவ்வாறு மாற்றுவது?

உங்கள் கணவரின் ஆதாரில் உள்ள முகவரியை நீங்கள் மாற்றினால், அவர்களிடம் சரியான ஆதாரச் சான்று இல்லை என்றால், முகவரி சரிபார்ப்புக் கடிதத்தின் சரிபார்ப்பாளராக உங்களைச் சேர்க்கலாம்.

ஆதார் அட்டையில் எனது குழந்தைகளின் முகவரியை மாற்றுவது எப்படி?

உங்கள் குழந்தையின் ஆதாரில் உள்ள முகவரியை நீங்கள் மாற்றினால், அவரிடம் சரியான ஆதாரச் சான்று இல்லை என்றால், முகவரி சரிபார்ப்புக் கடிதத்தின் சரிபார்ப்பாளராக உங்களைச் சேர்க்கலாம்.

ஆதார் அட்டையில் எனது மனைவியின் முகவரியை எவ்வாறு புதுப்பிப்பது?

உங்கள் மனைவியின் ஆதாரில் உள்ள முகவரியை நீங்கள் மாற்றினால், அவரிடம் சரியான ஆதாரச் சான்று இல்லை என்றால், முகவரி சரிபார்ப்புக் கடிதத்தின் சரிபார்ப்பாளராக உங்களைச் சேர்க்கலாம்.

 

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?

இந்தியாவில், ஆதார் அட்டை கட்டாய ஆவணமாகும், ஏனெனில் இது மிகவும் விருப்பமான அடையாள சான்றுகளில் ஒன்றாகும். சமீபத்தில், ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் பதிவு செய்தல் அல்லது இணைத்தலை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

இன்று, ஆதார் அட்டை மின்னஞ்சல் ஐடி புதுப்பித்தல் மற்றும் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பதற்கான செயல்முறை சிக்கலானலானதாக இல்லை; இதற்காக, திறமையான UIDAI-ன் ஆன்லைன் போர்ட்டலுக்கு நன்றி. இது ஒரு பயனர் நட்பு இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது, மேலும் எவரும் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை தங்கள் ஆதார் அட்டையில் தடையின்றி இணைக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம். எப்படி என்று அறிய விரும்புகிறீர்களா? மேலும் வாசிக்கவும்.

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?

உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால், பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றவும்ஃ

  1. உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று ஆதார் புதுப்பிப்பு அல்லது திருத்தம் படிவத்தை நிரப்பவும். 
  2. இந்த படிவத்தை அந்தந்த ஆதார் நிர்வாகியிடம், 50 ரூபாய் சேவைக் கட்டணத்துடன் சமர்ப்பிக்கவும். புதுப்பித்தல் கோரிக்கை எண் (URN) கொண்ட ஒரு ஒப்புதல் ஸ்லிப்பை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் புதுப்பித்தல் கோரிக்கையின் நிலைமையை சரிபார்க்க நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். 
  3. 90 நாட்களுக்குள், உங்கள் மொபைல் எண்ணானது, உங்கள் ஆதார் தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படும். நீங்கள் உங்கள் மின்னஞ்சல் ஐடியை இதே போன்று புதுப்பிக்கலாம்.

உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணைப் புதுப்பித்திட படிநிலைகள்

உங்கள் மொபைல் எண்ணை நீங்கள் தொலைத்துவிட்டால் அல்லது சில காரணங்களால் அதை செயலிழக்க விரும்பினால், உங்கள் மொபைல் எண்ணை ஆதார் அட்டையில் ஆன்லைனில் மாற்ற முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதற்கான பதில் ஆம். UIDAI-ன் தரவுத்தளத்தில் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீங்கள் அதை புதுப்பிக்கலாம்ஃ

  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இருந்தால் உங்கள் மொபைல் எண்ணை OTP கொண்டு மாற்றுதல். 
  • உங்கள் மொபைல் எண்ணை இழந்திருந்தால், OTP இல்லாமல் மொபைல் எண்ணை புதுப்பிக்கவும் அல்லது மாற்றுதல்.

உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையில் OTP கொண்டு  மாற்றுதல்

OTP-ஐப் பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணை, உங்கள் ஆதார் எண்ணில் மாற்றுவதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1. UIDAI--ன் ஆன்லைன் போர்ட்டல் மற்றும் வலைப்பக்கத்தில் உள்நுழைந்து, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை தட்டச்சு செய்யவும்.

2. இப்போது, 'OTP-ஐ அனுப்பு' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், உங்கள் மொபைல் எண்ணில் OTP-ஐப் பெறுவீர்கள். OTP-ஐ உள்ளிட்டு, "OTP-ஐ சமர்ப்பிக்கவும்" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 

3. ஒருமுறை மீண்டும் அதே வலைபக்கத்திற்கு வந்த பின், பல்வேறு 'ஆன்லைன் ஆதார் சேவைகள்' பற்றிய விருப்பங்களைக் காண்பீர்கள். நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு, 'OTPஐ அனுப்பவும்‘ என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்ததாக, விவரங்களை சரிபார்க்கவும், ‘சேமி மற்றும் தொடரவும்‘ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.

5. அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின், சமர்ப்பி விருப்பத்தை கிளிக் செய்யவும். உங்கள் நியமன ஐடி குறித்து ஆதார் அதிகாரப்பூர்வ போர்ட்டலிலிருந்து உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.

6. இறுதியாக, அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் "நியமனம்" புத்தகத்தை முன்பதிவு செய்யுங்கள். உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்து மாற்றவும், செயல்முறையை முடிக்க கூடுதல் ஆவணங்களை வழங்கவும் ஆதார் சேவா கேந்திராவுக்கு வருகை தரவும்.

OTP இல்லாமல் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுதல்

OTP இல்லாமல் மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால், கீழே உள்ள படிநிலைகளைப் பின்பற்றவும்:

  1. ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.
  2. விண்ணப்ப படிவத்தில், உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  3. ஆதார் அதிகாரி உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, புதுப்பித்தல் கோரிக்கை எண்ணைக் கொண்ட ஒப்புதல் ஸ்லிப்பை உங்களுக்கு வழங்குவார் (URN)
  4. இறுதியாக, செயல்முறையை முடிக்க 25 ரூபாய் செயலாக்கக் கட்டணத்தை செலுத்தவும்.

ஒரு மொபைல் எண்ணுடன் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்க முடியும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஒரே மொபைல் எண்ணை பல ஆதார் அட்டைகளுடன் இணைக்கலாம். எந்த பிரச்சனையும் இல்லாமல் அதை புதுப்பிக்க நீங்கள் மேலே உள்ள படிநிலைகளைப் பின்பற்றவும்.

மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்கப்பட்டுள்ளதை அறிவது எப்படி?

உங்கள் மொபைல் எண், உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்க பின்வரும் இரண்டு வழிமுறைகள் உள்ளனஃ

வழிமுறை 1:

  1. UIDAI இணையதளத்தைப் பார்வையிட்டு, ‘ஆதார் சேவைகள்’ என்ற விருப்பத்தின் கீழ், ‘ஆதார் எண்ணைச் சரிபார்த்தல்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. இப்போது உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்.
  3. இறுதியாக, உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க 'ஆதாரை சரிபார்க்க தொடரவும்’ என்ற விருப்பத்தைத் தட்டவும்.

வழிமுறை 2

  1. UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, 'ஆதார் சேவைகள்' விருப்பத்தின் கீழ், 'சரிபார்ப்பு மின்னஞ்சல்/மொபைல் எண்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. இப்போது, மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுத்த பிறகு, மொபைல் எண், ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  3. ‘சரிபார்ப்பு OTP‘ என்ற விருப்பத்தை கிளிக் செய்து, சரிபார்ப்பு செயல்முறையை முடித்திட OTP-ஐ உள்ளிடவும்
  4. அதன் பிறகு, உங்கள் மொபைல் எண் UIDAI பதிவுகளுடன் சரிபார்க்கப்படுகிறதா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 

பின்வரும் படம் இரண்டு வழிமுறைகளுக்கும் பொருந்தும்ஃ

இறுதி வார்த்தை

இந்தியாவில், ஆதார் அட்டை ஒரு தேவையான ஆவணமாக செயல்படுகிறது, எனவே இது உங்கள் தற்போதைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவை புதுப்பிக்கப்பட வேண்டும். தேவையான தகவல்களுடன், உங்கள் ஆதார் அட்டையில் தொலைபேசி எண்ணை ஆன்லைனில் மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு நீங்கள் பதிலைப் பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள, உங்கள் மொபைல் எண்ணை எந்த பிரச்சனையும் இல்லாமல் புதுப்பிக்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆதாரில் மாற்றங்களை ஆன்லைனில் செய்வதற்கு, மொபைல் எண்ணை புதுப்பிப்பது கட்டாயமா?

ஆம், ஆன்லைனில் ஆதாரில் மாற்றங்கள் செய்திட, உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது UIDAI--ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே.  நீங்கள் அதை OTP உடன் அல்லது OTP இல்லாமல் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம். 

எனது ஆதார் அட்டையில் எந்த புலங்களை நான் புதுப்பித்தல் செய்ய முடியும்?

மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, முகவரி போன்ற மக்கள் தொகைத் தகவலை உங்கள் ஆதார் அட்டையில் நீங்கள் மாற்றலாம். 

எனது ஆதார் அட்டையில் மின்னஞ்சல் ஐடியை எப்படி புதுப்பிப்பது?

உங்கள் மின்னஞ்சல் ஐடியை புதுப்பிக்க, ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று புதுப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடியைக் குறிப்பிடும் ஆதார் பதிவு/சரிசெய்தல் படிவத்தை நிரப்பவும். உங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க 25 ரூபாய் செலுத்த வேண்டும்.

எனது மொபைல் எண்ணை இணைக்காமல், எனது ஆதார் அட்டை தகவலை ஆன்லைனில் புதுப்பிக்க முடியுமா?

இல்லை, ஆன்லைன் ஆதார் மாற்றங்களைச் செய்ய, உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.

எனது ஆதார் அட்டை நிலைமையை ஆன்லைனில் சரிபார்க்க முடியுமா?

ஆம், UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்த்திற்குச் செல்வதன் மூலம், உங்கள் ஆதார் அட்டை நிலைமையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

 

ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி?

இந்தியாவில், ஆதார் அட்டை அத்தியாவசியமான உத்தியோகபூர்வ ஆவணங்களில் ஒன்றாகும். இது, பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைகள், வங்கிக் கணக்கைத் திறத்தல், சொத்து வாங்குவது போன்ற அனைத்து அரசாங்கத் திட்டங்ககளிலும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரே ஆவணம். எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் மாற்ற விரும்பினால்UIDAI ஒரு தடையற்ற செயல்முறையை நிறுவியுள்ளது. எப்படி என்று அறிய விரும்புகிறீர்களா? மேலும் வாசிக்கவும்.

எனது ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஆன்லைனில் புதுப்பிக்க முடியுமா?

இந்தக் கேள்விக்கான பதில் ஆம் என்பதுதான். உங்கள் ஆதார் அட்டையில், பிறந்த தேதியை ஆன்லைன் போர்ட்டல் அல்லது மொபைல் ஆப் மூலம் புதுப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழின் செல்லுபடியாகும் ஆதாரச் சான்றுடன், நீங்கள் அதை ஆன்லைனில் மாற்றலாம். 

மொபைல் எண்ணுடன் ஆன்லைனில் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது..

1. https://myaadhar.uidai.gov.in/ இல் சென்று உள்நுழையவும்.

2. உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, 'OTP அனுப்பவும்' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP-ஐப் பெறுவீர்கள். அதன் பிறகு, OTP-ஐ உள்ளிட்டு உள்நுழைவு விருப்பத்தை கிளிக் செய்யவும்.

3. உள்நுழைந்தவுடன், முகப்புப்பக்கத்தில் நீங்கள் பல்வேறு சேவைகளை அணுகலாம். பிறந்த தேதியை புதுப்பிக்க "ஆன்லைனில் ஆதார் புதுப்பித்தல்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

 

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பிவிடப்படுவீர்கள். புதுப்பித்தல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இங்கே நீங்கள் படிக்கலாம். ஆன்லைன் போர்ட்டல் மூலம், நீங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொழி மற்றும் முகவரியில் சிறிய திருத்தங்களைச் செய்யலாம். 

4. நீங்கள் அனைத்து படிநிலைகளையும் படித்தவுடன், ‘ஆதார் புதுப்பிக்க தொடரவும்’’ என்பதைக் கிளிக் செய்யவும்.

5. "பிறந்த தேதி" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்

6. பிறந்த தேதியில் திருத்தம் செய்ய அசல் ஆதார ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் தேவை. சம்பந்தப்பட்ட ஆவணம் உங்கள் பெயரில் இருப்பதையும், புதுப்பிக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்யவும்.

7. ஆவணங்களை பதிவேற்றவும்; கிரெடிட்/டெபிட் அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் 50 ரூபாய் செலுத்தவும்.

எந்த ஆதார சான்றும் இல்லாமல், உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவது எப்படி?

சரியான ஆதாரச் சான்று அல்லது ஆவண சான்றுகள் இல்லாமல், உங்கள் பிறந்த தேதியை மாற்ற எந்த வழியும் இல்லை. உங்கள் பிறந்த தேதியை மாற்றும்படி நீங்கள் கோரும்போது, ஆதாரத்திற்கான சட்ட ஆவணத்தை நீங்கள் வழங்க வேண்டும். இதில் பாஸ்போர்ட், SSLC புத்தகம் அல்லது சான்றிதழ், எந்த பல்கலைக்கழகம் அல்லது அரசாங்க வாரியத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், புகைப்பட அடையாள அட்டை போன்றவை அடங்கும். 

ஆதார் அட்டையில் பிறந்த தேதியைப் புதுப்பிக்க தேவையான ஆவணங்கள் யாவை?

உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை புதுப்பிக்க விரும்பினால், பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

  • PAN  அட்டை
  • பிறப்புச் சான்றிதழ்
  • பாஸ்போர்ட்
  • பிறந்த தேதியின் விவரங்களைக் கொண்ட ஏதேனும் புகைப்பட அடையாள அட்டை
  • பள்ளி விட்டுச் செல்லும் சான்றிதழ்
  • மத்திய/மாநில ஓய்வூதிய கொடுப்பனவு ஆர்டர்
  • திருநங்கை அடையாள அட்டை (ஏதேனும் இருந்தால்)
  • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் சிறுபான்மை சமூகங்களுக்கு செல்லுபடியாகக்கூடிய நீண்ட கால விசா (எல். டி. வி) மற்றும் வெளிநாட்டு பாஸ்போர்ட் தேவை.
  • UIDAI தரநிலை வடிவத்தில் வழங்கப்பட்ட பெயர் மற்றும் பிறந்த தேதியுடன் கூடிய அடையாளச் சான்றிதழ்.

ஆதார் அட்டையில் இரண்டு முறை பிறந்த தேதியை மாற்ற முடியுமா?

இல்லை, உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை  இரண்டு முறை மாற்ற முடியாது. இருப்பினும், விதிவிலக்கான கையாளுதல் செயல்முறைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் நீங்கள் இரண்டாவது முறையாக ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம். UIDAI பிராந்திய அலுவலகங்கள் விதிவிலக்கான கையாளுதல் செயல்முறைக்கு பொறுப்பாகும். ஆனால், நீங்கள் முறையான நியாயப்படுத்துதலைக் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதோ படிப்படியான வழிகாட்டி.

  1. நீங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் கொண்டு வர வேண்டும்.
  2. சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தில் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை, இரண்டாவது முறையாக மாற்ற நீங்கள் கோரலாம். ஒரு EPFO அதிகாரி, ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் தலைவர் அல்லது குழு ‘A‘ பிரிவின் கெஜெட் அதிகாரி UIDAI தர சான்றிதழை வழங்கலாம்.
  3. இந்த விஷயத்தின், முழுமையான விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகம் இரண்டாவது முறையாக பிறந்த தேதியை மாற்றுவதற்கான உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க முடிவு செய்யும். 

இறுதி வார்த்தை

வங்கிக் கணக்கைத் திறப்பது மற்றும் பான் அட்டைக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பெரும்பாலான உத்தியோகபூர்வ பணிகளுக்கு ஆதார் அட்டை அத்தியாவசிய ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் அட்டையில் உள்ள எந்த தகவலும் எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, உங்கள் பிறந்த தேதியில் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், உங்கள் மொபைல் எண்ணுடன், ஆன்லைனில், உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றலாம். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் ஏற்கனவே எனது ஆதார் எண்ணில் எனது பிறந்த தேதியை ஒருமுறை புதுப்பித்துள்ளேன். நான் அதை மீண்டும் புதுப்பிக்க முடியுமா?

இல்லை, நீங்கள் இரண்டாவது முறையாக உங்கள் பிறந்த தேதியை மாற்ற அனுமதிக்கப்படமாட்டீர்கள். இருப்பினும், உண்மையான மற்றும் செல்லுபடியாகக்கூடிய காரணத்திற்காக, உங்கள் பிராந்திய UIDAI அலுவலகத்திற்குச் செல்வதன் மூலம் நீங்கள் இதனைக் கோரலாம். 

எனது பிறந்த தேதியை ஆஃப்லைனில் நான் புதுப்பிக்க முடியுமா?

ஆம், அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்த்திற்குச் செல்வதன் மூலம் உங்கள் பிறந்த தேதியின் விவரங்களை புதுப்பிக்கலாம். 

ஆதார் ஆன்லைன் சேவையைப் புதுப்பிக்க, எனது துணை ஆவணங்களை எவ்வாறு சமர்ப்பிக்க முடியும்?

உங்கள் படத்தை ஸ்கேன் செய்து, ஆவணத்தை JPEG அல்லது PDF வடிவத்தில் ஆதார் ஆன்லைன் புதுப்பித்தல் சேவையில் பதிவேற்ற வேண்டும். இருப்பினும், சொத்து ஒப்பந்தங்கள், பாஸ்போர்ட்கள் போன்ற சில ஆவணங்களுக்கு, நீங்கள் பல ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

எனது ஆதார் எண்ணை புதுப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படுமா?

ஆம், உங்கள் ஆதார் அட்டையில் உள்ள எந்த மக்கள்தொகை தகவலையும் புதுப்பிக்க, ஜிஎஸ்டி உட்பட 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

பிறந்த தேதியை புதுப்பித்தலுக்கான எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், நான் என்ன செய்யலாம்?

முதல் முறை புதுப்பித்தல் கோரிக்கைகளுக்கு, 1947 என்ற என்னை அழைப்பதன் மூலம் உங்கள் கோரிக்கையை நிராகரித்ததற்கான காரணத்தை நீங்கள் சரிபார்க்கலாம்; மேலும், ஒப்புதலை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கலாம். 

பொருளடக்கம்

Clear offers taxation & financial solutions to individuals, businesses, organizations & chartered accountants in India. Clear serves 1.5+ Million happy customers, 20000+ CAs & tax experts & 10000+ businesses across India.

Efiling Income Tax Returns(ITR) is made easy with Clear platform. Just upload your form 16, claim your deductions and get your acknowledgment number online. You can efile income tax return on your income from salary, house property, capital gains, business & profession and income from other sources. Further you can also file TDS returns, generate Form-16, use our Tax Calculator software, claim HRA, check refund status and generate rent receipts for Income Tax Filing.

CAs, experts and businesses can get GST ready with Clear GST software & certification course. Our GST Software helps CAs, tax experts & business to manage returns & invoices in an easy manner. Our Goods & Services Tax course includes tutorial videos, guides and expert assistance to help you in mastering Goods and Services Tax. Clear can also help you in getting your business registered for Goods & Services Tax Law.

Save taxes with Clear by investing in tax saving mutual funds (ELSS) online. Our experts suggest the best funds and you can get high returns by investing directly or through SIP. Download Black by ClearTax App to file returns from your mobile phone.

Cleartax is a product by Defmacro Software Pvt. Ltd.

Company PolicyTerms of use

ISO

ISO 27001

Data Center

SSL

SSL Certified Site

128-bit encryption